Relations

30 வயதில் கருப்பை நீக்கப்பட்ட பெண்! உணர்ச்சிகளை தியாகம் செய்யும் கணவர்! அவங்க தாம்பத்தியத்தில் ஒன்று சேர்வது சாத்தியமா?

Oct 05 2021 08:43:00 PM

அரிதிலும் அரிதாக ஒரு சில பெண்களுக்கு இந்த மாதிரி நிகழும். ஒரு பெண்ணுக்கு தாய்மை என்ற ஸ்தானத்தை கொடுப்பதே கர்ப்பபை தான். அதையும் நீக்கிவிட்டால், அவங்க மன நிலை எப்படி இருக்குமென யோசித்துப்பாருங்கள். கேட்கவே மனசுக்கு சங்கடமா இருக்கு. இருந்தாலும், சிக்கலான பிரசவத்தின் போது, பெண்ணின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால், கருப்பை நீக்கியே ஆக வேண்டும். அதுவும் கட்டுப்படுத்த முடியாத உதிரப்போக்கு இருந்தால், கருப்பை நீக்குவது மட்டும் தான் பெண்ணைக் காப்பாற்ற ஒரே வழியாகும். அது நீக்கப்பட்டுவிட்டால், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறையத்தொடங்கும்.

womb pregnant husband

ஒரு பெண் என்பதற்கான உணர்வுகளை வர வைக்கும் ஹார்மோன் சுரப்பு குறைந்துவிட்டால், அதற்கடுத்து உறவில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு தீர்வு இல்லாமல் இல்லை. நமக்கு கர்ப்பபை நீக்கிவிட்டார்களே என்ற உணர்வு வராமல் இருந்தால் போதும், பழையபடி இயல்பான வாழ்க்கையை தொடர முடியும். கர்ப்பபை இல்லை என்ற மன அழுத்தம் தான், இதிலுள்ள பெரிய விஷயம். மற்ற ஹார்மோன் குறைபாடுகளைத் தீர்க்க எளிமையான மருத்துவ முறைகள் உள்ளன.

womb pregnant husband

இளம் பெண்களுக்கு கர்ப்பபை நீக்குவது மாதிரியான சூழ்நிலையில் கடுமையான மன அழுத்தம் ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகவே தாமதம் செய்யாமல் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும். கணவருக்கும்  சேர்த்தே ஆலோசனை பெற வேண்டும். கர்ப்பபை இல்லாததால் அடுத்து மகப்பேறு அடைய இயலாது. அதனை நினைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. அதற்கும் நிறைய வழிகள் உண்டு. தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லை என்பதை திரும்ப திரும்ப மனதில் நினைத்துக்கொண்டே இருக்கக் கூடாது.