Her

பெண்கள் ஜாக்கெட் அணிவதில் செய்யும் தவறு! அந்தக் காலம் மாதிரியே இப்பவும் இருக்குமா? பார்வையாலே பொசுக்கி எடுத்துருவாங்க!

Sep 09 2021 10:08:00 PM

கண்ணாடி போன்ற ஜாக்கெட் பொதுவாகவே கொஞ்சம் மூத்த பெண்கள் சகஜமாக அணியும் ரகம். குறிப்பாக கண்ணாடி போன்ற கறுப்பு நிற ஜாக்கெட்டும், வெள்ளை நிற பிராவும் வெளிப்படையாக உடலை வெளிகாட்டக்கூடியவை. இதற்கு மழை எல்லாம் தேவையில்லை. எப்போதுமே எல்லாமே வெளிப்படையாக தெரியும். ஆனால் நம்ம ஊருக்கு இந்த மாதிரி ஜாக்கெட் அணிவது தான் சௌகரியமாக இருப்பதாக பெரும்பாலான பெண்கள் நினைக்கிறாங்க.

dress jacket women

வெயிலுக்கு லைனிங் வைத்த ஜாக்கெட் அணிந்தால், வியர்வையால் பிரச்சனைகள் வரும். எல்லாம் தெரிகிறது என்பது தெரிந்து தானே அணிகிறார்கள். அவர்களுக்கு பிடித்திருந்தால் அவ்வாறே நடக்கட்டும். அதுவும் ஒரு பேஷன். அந்தக்காலத்தில் எல்லாப்பெண்களுமே இதே ரக ஜாக்கெட் தான் அணிந்திருந்தனர். அப்போது யாரும் போட்டோ எடுத்து தவறாக காட்டவில்லை. இன்னைக்கு மூலைக்கு மூலை கேமரா கையோடு அலைகின்றனர். எதையாவது போட்டோ எடுத்து பெண்களின் ஆடை பற்றி விமர்சனம் செய்கின்றனர்.

dress jacket women

இந்தக்கால மக்களுக்கு கொஞ்சம் கண்ணு கெட்டுப்போச்சு. எல்லாமே தப்பா அணுகறாங்க. சாதாரண உடையாக இருந்த கண்ணாடி ஜாக்கெட், இன்னைக்கு கவர்ச்சி உடை போல பார்க்கப்படுகிறது. அப்போ இருந்த மக்களின் மனநிலைக்கும், இன்றைய மக்களின் மனநிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. தற்போது மூக்குத்தி அணிந்த பெண்களுக்குக் கூட பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. நம்மூரில் கிடைக்கும் மருதாணி இலைகளை அரைத்து கைகளில், கால்களில் வட்ட வட்டமாக இடும் மருதாணியின் அழகும் காணாமல் போய்விட்டது.

dress jacket women

நாகரீகம் என்ற பெயரில் மருதாணியின் மகத்துவமும், மூக்குத்தியின் முக்கியத்துவமும் காணாமல் போனது போல, ஆடை கலாச்சாரமும் அழிந்துகொண்டே வருகிறது. சந்தையில் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள ப்ளவுஸ் எல்லாம் பக்காவாகத்தான் இருக்கிறது. ஆனால் சேலைக்கு கொஞ்சம் வித்தியாசமான ஜாக்கெட் அணிந்தால் போதும், ஆடை அணிவது குறித்து வகுப்பெடுக்க கிளம்பி வந்தறாங்க ஒரு கூட்டம்.