இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருகிறார். அஜித் நடிக்கப்போகும் AK62 படத்தை இவர் தான் இயக்கப்போகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய நீண்ட கால காதலியான தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்.

விக்னேஷ் சிவன் சிம்புவை வைத்து முதன் முதலாக போடா போடி என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். இந்த படம் தான் விக்னேஷ் சிவனை ஒரு வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டியது.

முன்னதாக இந்த நானும் ரவுடி தான் படத்தை எடுக்கும் நேரத்தில் இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. முதல் படமே தோல்விப்படமாக கொடுத்த விக்னேஷ் சிவனை நம்பி பணம் போட எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. நடிகர் தனுஷ் தன்னுடைய பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர் பார் நிறுவனம் சார்பில் நானும் ரவுடி தான் படத்தை தயாரித்து வெளியிட்டார். நான் இப்போ இவ்வளவு முன்னணி இயக்குநரா இருக்கேன்னா அதுக்கு காரணம் தனுஷ் சார் தான். அவருக்கு நன்றி தெரிவிக்க நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன் என்று விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
