இளையதளபதி விஜய் நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வசீகரா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்னேகா நடித்திருப்பார். வடிவேலு விஜய் காம்பினேஷனில் காமெடி காட்சிகள் பட்டாசு கிளப்பும். இந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் தான் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் படம் வெளியாகி இருந்தது.

தனிப்பட்ட முறையில் விஜய்யும், அஜித்தும் நல்ல நண்பர்கள். இதை பல மேடைகளில் இருவரும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்த மீடியா தான் இருவரையும் மிகப்பெரிய எதிரிகள் போல சித்தரித்து காட்டுகிறது. இப்பவும் இருவரும் அடிக்கடி சந்தித்து நட்பு பாராட்டி வருகின்றனர். இந்த வசீகரா படத்தின் இயக்குனர் செல்வபாரதி அஜித்தை தாக்கி ஒரு வசனம் எழுதி விஜய்யிடம் சொல்லி இருக்கிறார்.

நீ பேருக்கு தான் வில்லன், நான் பேசிக்காவே வில்லன் இதுதான் அந்த டைலாக். இதை கேட்ட விஜய் வசனம் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா உன்னை நான் உதைப்பேன். எங்க ரெண்டுபேருக்குள்ளயும் எந்த பிரச்சனையும் இல்ல, நீங்க என்ன பிரச்சனை கிளப்ப பாக்குறீங்களா, இந்த வசனத்தை படத்தில் வைத்தால் வேண்டும் என்றே பிரச்சனை கிளப்புற மாதிரி இருக்கும் என்று கோவமாக விஜய் சொன்னதாக அண்மையில் பேட்டி ஒன்றில் வசீகரா படத்தின் இயக்குனர் செல்வபாரதி தெரிவித்துள்ளார்.
