1940ஆம் ஆண்டு பிறந்த இரட்டை குழந்தைகள் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக பிறந்து நான்கு வாரத்திலேயே பிரிந்துவிட்டனர். சரியாக 39 வருடங்கள் கழித்து 1979 ஆம் ஆண்டு இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். அப்போது தான் அந்த இருவருக்கும் இடையேயான ஒற்றுமை என்ன என்று புலப்படுகிறது.

அவர்கள் இருவரையும் தத்து எடுத்தவர்கள் அந்த இருவருக்கும் ஜிம் என்று பெயர் வைத்துள்ளனர். இருவரும் கணக்கு மற்றும் தச்சு தொழிலில் ஆர்வம் கொண்டவர்காளாக இருந்துள்ளனர். இவருவரும் பாதுகாப்பு துறையில் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரும் லிண்டா என்ற பெண்ணை திருமனம் செய்து அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பெட்டி என்ற பெண்ணை மறுமணம் செய்துள்ளனர். இருவரின் பிள்ளைகளின் பெயர் ஜேம்ஸ் ஆலன் என்று வைத்துள்ளனர். அதேபோல இருவரும் வளர்த்த நாயின் பெயர் கூட டாய். நம்பறதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இது உண்மை தான்.
