2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் இயக்குனர் ஜான் மஹேந்திரன் இயக்கத்தில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய்யை ஒரு முழு நீள காதல் நாயகனாக படத்தில் இயக்குனர் காட்டி இருப்பார்.

இந்த சச்சின் படத்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் வெளியானது. எல்லோரும் சந்திரமுகி படத்திற்கு புக் செய்து சந்திரமுகி படத்தை கொண்டாடி தீர்த்தனர். ஆனால் அதே நேரத்தில் இந்த சச்சின் என்ற காதல் காவியமும் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

இந்த சச்சின் படத்தில் விஜய்யின் தந்தையாக ஒரு மிகப்பெரிய பணக்கார தொழிலதிபராக ரகுவரன் நடித்திருப்பார். முதலில் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நிறைய நடிகர்களின் பெயரை இயக்குனர் லிஸ்ட்டில் வைத்திருந்தார். ஆனால் நடிகர் விஜய் தான் ரகுவரன் சாரை இந்த கதாப்பாத்திரத்தில் போடலாம், அவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி ரகுவரனை இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார். விஜய் சொன்னதை போலவே இந்த ரகுவரன் கதாபாத்திரத்தை எல்லோரும் ரசித்தனர்.
