நாம் வெளிப்படையாக பேசத் தயங்கும் நிறைய விஷயங்களை சில நாடுகளில் சர்வ சாதாரணமாக பேசுகிறார்கள். உதாரணமாக நம்ம நாட்டில் ஆணுறுப்பை பற்றியோ, செக்ஸ் பற்றியோ யாரும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். பூட்டான் நாட்டில் ஆணுறுப்பை கடவுளாக வணங்கும் வழக்கம் இப்போதுவரை நடைமுறையில் உள்ளது.

அவர்களின் வீடு, தங்கும் விடுதி, உணவகம் என எல்லா இடங்களிலும் ஆணுறுப்பின் படத்தின் படத்தை தான் வரைந்திருப்பார்கள். அந்த மக்கள் பயன்படுத்தும் அலங்காரப்பொருட்கள், வண்டி கீ செயின் கூட ஆணுறுப்பு வடிவத்தில் தான் இருக்கும். Drukpa Kunley என்னும் புத்த துறவி பூட்டான் நாட்டில் பௌத்த மதத்தை ஒரு வித்தியாசமான மக்களிடையே பரப்பினார்.

ஆணுறுப்பு கெட்ட விஷயங்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது என்கிற கொள்கையை பூட்டான் நாடு முழுவதும் பரப்பினார். பின்னர் chimi Lhakhang என்ற ஆலயத்தை ஆணுறுப்புக்காக கட்டினார். பின்னர் மக்கள் இந்த கலாச்சாரத்தை இன்றுவரை கடைப்பிடித்து ஆணுறுப்பை தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆதிகாலத்தில் மனிதன் புது உயிர் உருவாக காரணமாக இருந்த இந்த ஆணுறுப்பை தெய்வமாக வணங்குவதில் எந்த தப்பும் இல்லை என்று பூட்டான் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.
