ஒரு பெரிய பணக்கார வீட்டு பெண்மணி சாதாரண ஏழை வீட்டு பையனை காதலித்து திருமணம் செய்வதை போல நிறைய தமிழ் படங்களில் பார்த்திருப்போம். இதெல்லாம் படத்துல மட்டும்தான் நடக்கும், நெஜத்துல பொண்ணுங்க பசங்களை காதலிச்சுட்டு கழட்டி விட்டுருவாங்க என்று கேள்விப்பட்டிருப்போம். சூர்யவம்சம் பட பாணியில் அண்மையில் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிஷ்வர் என்ற பெண் மருத்துவர் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் எல்லோருக்கும் தேனீர் கொடுக்கும் வேலை செய்துவந்துள்ளார் சாஷாத் என்னும் துப்புரவு தொழிலாளி. எல்லா மருத்துவர் அறைக்கும் சென்று தேனீர் கொடுப்பது, அவர்களுக்கு உதவுவது தான் ஷாஷாத்தின் வேலை.

அந்த வகையில் அண்மையில் கிஸ்வர் அறைக்கு சென்று டீ கொடுக்க சென்றுள்ளார். அப்போது ஏதாவது உதவி என்றால் உங்களை அழைக்கிறேன் என்று சொல்லி ஷாஷாத்தின் மொபைல் எண்ணை வாங்கி இருக்கிறார் கிஸ்வத். அன்று இரவு ஷாஷாத் எண்ணின் வாட்சப் ஸ்டேட்டஸை பார்த்துவிட்டு அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார் கிஸ்வர்.

அடுத்த நாள் தன்னுடைய காதலை ஷாஷாத்திடம் சொல்லி இருக்கிறார் கிஸ்வத். ஷாஷாத்துக்கும் கிஸ்வத்தை ரொம்ப பிடிச்சு போகவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரங்களில் பரவ ஆரம்பித்தது. ஒரு துப்புரவு தொழிலாளியை இந்த டாக்டர் கல்யாணம் பண்ணி இருக்காங்களே என்று இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்தனர். உடனே தன்னுடைய மருத்துவர் வேலையை உதறி தள்ளிவிட்டு தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளினிக் காதல் கணவருடன் வாழ ஆரம்பித்து விட்டார் கிஸ்வத்.
