பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பாம்பின் விஷத்தன்மை காரணமாக பாம்பை பார்த்து எல்லா மக்களும் பயந்து நடுங்குகிறார்கள். ஆனால் சில நாடுகளில் பாம்புகள் சுத்தமாக இருக்காது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்து, நியூஸிலாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அன்டார்க்டிக்கா போன்ற நாடுகளில் பாம்புகளே இருக்காதாம்.

அந்த நாட்டில் தட்ப வெப்ப சூழ்நிலைகளால் தான் அங்கு பாம்புகள் இருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல பாம்புகள் எந்த நாட்டில் அதிகம் இருக்கும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாம்புகளின் தலைநகரம் என்று நம் இந்தியா தான் சொல்லப்படுகிறது. ஒரு வருடத்தில் 81000 பேர் பாம்புகளால் தாக்கப்படுகிறார்கள். அவர்களில் 11000 பேருக்கு குறையாமல் பாம்புக்கடியால் உயிரிழக்கிறார்கள் என்கிற உண்மை தகவலும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரை மொன்சூன் பருவக் காற்று இந்தியாவில் வீசும். இந்த காலத்தில் பாம்புகள் தங்கள் இணையுடன் சேருவதற்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வருகின்றன. இந்த நேரத்தில் தான் பாம்பு கடிப்பட்டு மனிதர்கள் இறக்கும் அவலம் உண்டாகிறது. சகாராவிற்கு தெற்கில் அமைந்துள்ள ஆப்ரிக்க கண்டப்பகுதி பாம்புகளின் அட்டகாசம் நிறைந்த இடமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு வருடத்திற்கு 30000 பேர் பாம்புக்கடியால் இறந்துபோகிறார்கள். பாம்பின் விஷம் ரொம்ப விலை உயர்வானது. நாகப்பாம்பின் 6 சொட்டு விஷம் 153000 டாலர்கள் வரை வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது என்று ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது.
