பொதுவாக திருடர்களில் பல வகை உண்டு. திருடர்கள் எல்லோரும் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. வடமாநிலத்துக்கு நீங்க ரயில் பயணம் பண்ணியிருக்கீங்களா. பாதி பேர் டிக்கெட்டே எடுக்க மாட்டாங்க. நீங்க கஷ்டப்பட்டு புக் பண்ணுன சீட்ல அசால்ட்டா வந்து டிக்கெட்டே எடுக்காத ஒருத்தன் ஒக்காந்துக்குவான்.

நீங்க TTR கிட்ட கம்பளைண்ட் பண்ண போனா அந்த TTR யும் எதுவும் கண்டுக்க மாட்டாரு. இதுதான் வடமாநிலங்களில் ரயில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கும் ஒரு உண்மை சம்பவம். பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி பார்க்கலாம். பீகார் மாநிலம் பெகுசரா விலிருந்து கஹாரியா வரை செல்லும் ரயிலில் சாஹேபூர் கமால் என்கிற ஸ்டேஷனில் ரயில் நின்றபோது திருடன் ஒருத்தன் பயணியின் செல்போனை திருட முயற்சி செய்துள்ளான்.

அப்போது அந்த பயணி அந்த திருடனின் கையை அவன் தப்பிக்க முடியாத அளவுக்கு கெட்டியாக பிடித்துவிட்டார். இந்த பயணியுடன் பயணம் செய்த இன்னொரு நண்பரும் அந்த திருடனின் கையை சேர்த்து கெட்டியாக பிடித்துக்கொள்ள ஐயோ என் கையை விடுங்க, விடுங்க என்று அந்த திருடன் கதறியுள்ளான். ரயில் கிளம்பி கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரம் வரை திருடன் ரயிலில் கதறி அழுதுகொண்டே தொங்கிகிட்டு வந்துள்ளான். கடைசியாக அடுத்த ஸ்டேஷன் வந்த பின்னர் திருடன் கையை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளான். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
