தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் சமீபத்தில் கொடுத்த மேடை பேச்சு ஒன்றில், அவர் பல முன்னணி ஹீரோ ஹீரோயின் பற்றி பல உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளார். ஒரு தயாரிப்பாளர் எவ்வித இக்கட்டான சூழலுக்கு உள்ளாகிறார் என்பதை கூறியுள்ளார். அவரது பேச்சை கேட்கும்போது, சினிமாவில் இப்படி கூட நடக்குமா என்று தான் எண்ண தோன்றுகிறது.
நயன்தாராவிற்கு ஏழு அசிஸ்டண்ட்டாம். ஒருவருக்கு சம்பளம் தினமும் பதினைந்தாயிரம். அப்படியானால் தினமும் ஒரு லட்சத்திற்கு மேல் கொடுக்க வேண்டும். ஐம்பது நாள் ஷூட்டிங் என வைத்துக்கொண்டால் கூட, அதுவே ஐம்பது லட்சம் தாண்டுகிறது. இது இல்லாமல் ஹீரோயினுக்கு தனி சம்பளம் வேறு. ஆண்ட்ரியாவோ, எனக்கு மேக்கப் மேன் பாம்பேவில் இருந்து தான் வர வேண்டும் என அடம் பிடிக்கிறாராம். திரிஷாவோ அவரது படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு வரவே பதினைந்து லட்சம் கேட்கிறாராம். ஆனால் பல பேட்டிகளில் சினிமாவை சேர்ந்த பலர், நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் ஆதரவாக பேசுவது போல்தான் இருக்கும். தயாரிப்பாளர் ராஜன் போன்ற ஒருசிலர் தான் சினிமாவில் உள்ளதை உள்ளபடி சொல்கிறார்கள். சினிமா துறையில் ஒரு உண்மை ஜாம்பவான்
தயாரிப்பாளர் ராஜன் கூறும் சில விஷயங்கள் மிகவும் வியப்பாக கூட இருந்தது. உதாரணத்திற்கு சில நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர் கொடுக்கும் கேரோவனை கூட தேவையில்லாமல் சீட்டு விளையாடுவது போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக கூறுகிறார். இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். அதாவது ரஜினி போன்ற நடிகர்கள் ஷூட்டிங் வந்தால், காட்சி முடியும்வரை ஸ்பாட்டிலே உட்கார்ந்திருப்பார்களாம். மம்முட்டி போன்ற நடிகர்களோ தயாரிப்பாளரிடம் எதுவும் எதிர்பார்க்காமல் சொந்தமாக கேரோவனை வாங்கியுள்ளார்களாம். அதற்காக டீசல், டிரைவர் சம்பளம் என எல்லாமே சொந்த காசுதான்.
ஆனால் இங்குள்ள நடிகர்களோ தாங்கள் தங்கள் காருக்கு வைத்துள்ள டிரைவருக்கு கூட சம்பளம் தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களாம். ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஐம்பது கோடியில் டீசல் போடக்கூடாதா? அதுவும் ஹீரோக்கள் ஹீரோயின்கள் யாரும் உணவை வீட்டில் இருந்து கொண்டுவருவதில்லையாம். எல்லாமே தயாரிப்பாளர் பக்கம் தான் கொடுக்க வேண்டுமாம். அதுவும் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு டிஷும் ஒவ்வொரு உணவகத்தில் தான் வாங்க வேண்டுமாம். வறுவல் ஒரு கடையில், குழம்பு ஒரு கடையில் இப்படி தான் உண்பார்களாம்.
பொதுவான கேள்வி என்னவென்றால், தயாரிப்பாளர் ஏன் இவ்வளவு காஸ்லியான நடிகர் நடிகையை நோக்கி ஓடுகிறார்கள். கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒருதலைராகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இசை அமைப்பாளர் நடிகர்கள் அனைவரும் புதுமுகம். நட்சத்திர கூட்டம் இல்லாத பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் என்ன செய்வது? பெரிய நடிகர்கள் நடித்தால் உடனே விற்றுவிடும் என்பதால் அவர்களை நோக்கி ஓடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.