சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது. ரஜினிகாந்த் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டையார் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினிகாந்தை அந்த கதாப்பாத்திரத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று மணிரத்னம் ரஜினிகாந்தை பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வைக்கவில்லை.

ஏற்கனவே ரஜினிகாந்தும், மணிரத்னமும் 1990ஆம் ஆண்டு தளபதி படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர். அந்த படம் மெகா ஹிட் அடித்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியால் மீண்டும் மணிரத்னத்துடன் இணைய ரஜினிகாந்த் விரும்பியுள்ளார். எனக்காக ஒரு நல்ல கதை ரெடி பண்ணுங்க என்று சொல்லி இருக்கிறார். கூடிய விரைவில் ரஜினி, மணிரத்னம் கூட்டணியில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று திரை வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
