பருத்திவீரன் படத்தை பார்த்துவிட்டு லாரி டிரைவர்னாலே இப்படித்தான், மோசமானவங்க என்கிற நினைப்பில் இருப்போம். உண்மையில் லாரி ஓட்டுனர்கள் அந்த அளவுக்கு மோசமானவங்க கிடையாது. லாரி ஓட்டுனர்களை பெரும்பாலான மக்கள் தீண்டத்தகாத மக்களை போல பார்க்கிறார்கள். உண்மையிலேயே லாரி டிரைவர்கள் ரொம்ப பாவப்பட்ட மனிதர்கள்.

பொண்டாட்டி, புள்ள, குட்டி எல்லாரையும் விட்டுவிட்டு வெயில், மழை, குளிரில் பயணிப்பவர்கள். அந்த என்ஜின் சூட்டில் லாரியை இயக்குவது என்பது ரொம்ப கஷ்டம். அதுவும் மதிய வேளையில் வெயில் நேரத்தில் என்ஜினின் சூடு டிரைவர்களை வறுத்து எடுத்துவிடும். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் லாரி பிரேக் டவுன் ஆனால் ரொம்ப சிரமம்.

இப்பயாச்சும் போன் வசதி இருக்கு. போன் வசதி இல்லாத காலத்தில் இந்த மாதிரி சிக்கலில் மாட்டிக்கொண்டால் வண்டியை பழுது பார்க்க ஆள் துலவுவதற்குள் படாத பாடு படவேண்டி இருக்கும். சரக்கு, காய்கறி, மீன் போன்ற பொருட்களை குறித்த நேரத்துக்குள் டெலிவரி செய்தே தீரவேண்டும். நடுவில் வரும் போலீஸ், RTO பிரச்சனைகளை சமாளித்து குறிப்பிட்ட நேரத்தில் வண்டியை டெலிவரி செய்வது என்பது ரொம்ப கஷ்டம்.

சில இடங்களில் வண்டி விபத்தில் சிக்கினால் ஓனரில் இருந்து அங்குள்ள மக்கள் வரை எல்லாத்தையும் சமாளிக்க வேண்டும். வடமாநிலங்களுக்கு செல்லும் ஓட்டுனர்கள் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தான் பயணிப்பார்கள். லாரியை வழிமறித்து டிரைவரை கொன்றுவிட்டு வடமாநில கொள்ளையர்கள் லாரியை திருடி சென்றுவிடுவார்கள். இதனால் தான் வடமாநிலங்களுக்கு செல்லும் தென்னிந்திய லாரிகள் 5-10 லாரி வரிசையாக செல்லும். எனவே இனி லாரி டிரைவர்களை பார்க்க நேர்ந்தால் அவர்களை பற்றிய மோசமான எண்ணத்தை கைவிட்டு அவர்களை மரியாதையாக நடத்துவோம்.
