மனித உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இந்த ரத்தம் தான் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் இயக்குவதற்கு உதவுகிறது. சிலருக்கு உடல் எப்போதும் அரித்துக்கொண்டே இருக்கும். இந்த அரிப்புக்கு காரணம் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாக இல்லாததுதான்.

முள்ளங்கியை நாம் சாப்பிடும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நம்முடைய உடல் அரிப்பு மற்றும் ரத்தத்தில் உள்ள அசுத்தப்பிரச்சனை சரியாகிவிடும். இந்த முறைப்படி செய்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிப்பு ஆகிவிடும்.

அதேபோல சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் மீது உள்ள முட்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் உள்ளே உள்ள சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இந்த சதையை ஏழு முறை தண்ணீரில் கழுவி தினமும் அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் அழிந்துவிடும்.
