Her

கொஞ்சம் மாற்றினாலும் சோலி சுத்தம்! மூக்கில் அணியும் கண்ணாடிக்கு இவ்வளோ பவர் இருக்கா? கடைக்காரர்கள் வலிய வலிய வந்து கெஞ்சினாலும் இதற்கு "நோ" சொல்லுங்க!

Sep 23 2021 11:34:00 AM

எனக்கு தொடர்ச்சியாக லேப்டாப்பில் வேலை என்பதால், பவர் இல்லாத கண்ணாடி போட முடிவெடுத்தேன். தெரிந்தவர்களிடம் விசாரிக்கையில் யூ.வி கோட்டிங் கொடுத்த கண்ணாடி போட்டால் நல்லா இருக்குமென சொன்னாங்க. ஒருமுறை கண் பவர் ஏதாச்சும் மாறி இருக்கா என்பதை உறுதி செய்துகொள்ள, ஒரு செக்அப் செய்துகொண்டேன். அதில் எந்த குறையும் இல்லை. பவர் இல்லாத கண்ணாடி வாங்கிக்கொள்ள பரிந்துரை செய்தனர். கண் மருத்துவமனைக்கு அருகிலேயே இருந்த ஆப்டிக்கல்ஸ் கடையில், மருத்துவர் கொடுத்த சீட்டை காட்டிவிட்டு, ஆர்டர் கொடுக்க காத்திருந்தேன்.

specs fiber glass

கூட்டம் அதிகம் என்பதால், எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில், நான் பார்த்த வரைக்கும் கண்ணாடி டைப் வேண்டுமென கேட்டவர்களிடம் எல்லாம், பைபர் வாங்கிக்கோங்க ரொம்ப நாள் உழைக்கும் என்று சொல்லி, அந்தக் கடைக்காரர் மூளைசலவை செய்துகொண்டே இருந்தார். எனக்கும் கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. சிறுவயதிலிருந்தே கண்ணாடி அணிந்து பழக்கப்பட்ட நண்பர் ஒருவரை அழைத்து விவரம் கேட்டேன்.

specs fiber glass

அவரம் கொஞ்ச நாள் பைபர் கிளாஸ் பயன்படுத்தியுள்ளார். பின்னாட்களில் கண்ணாடி முறைக்கே மாற்றிக் கொண்டார். கடைக்காரர்கள் பெரும்பாலும் ஃபைபர் கண்ணாடிக்கு முக்கியம் தந்து பேசுகின்றனர். ஆனால் என்னுடைய விருப்பம் கிளாஸ் டைப் மூக்கு கண்ணாடி தான். இது இயற்கையானது. சைட் எஃபெக்ட்டும் எதுவும் இருக்காது. அதில் கீறல் விழுந்தாலும் எளிதாக சரி செய்துவிடலாம். அதற்காக ஃபைபரை குறை சொல்லக்கூடாது. இரண்டுமே பரவாயில்லை. ஆனால் கண்ணாடிதான் மிக்கச்சிறந்தது என்பேன்.

specs fiber glass

பிறருடைய அனுபவத்தை கேட்டதை வைத்து சொல்கிறேன். மூக்கு கண்ணாடி கிளாஸாக இருந்தால் உடைந்து விடும் வாய்ப்புகள் அதிகம். அதனால், பைபர்தான் நல்லதுன்னு சொல்வாங்க. ஆனால், அதிலும் ஒரு சங்கடம் இருக்கு. பைபர் கண்ணாடியைத் துடைக்கும் போது, யாருமே அதற்கான மிருதுவான துணியில் துடைப்பதில்லை. சில நேரங்களில் சட்டை கூட கண்ணாடி துடைக்கும் துணியாகிவிடும். எல்லா விதமான துணிகளிலும் துடைக்கிறோம். அதனால், பைபர் கண்ணாடியில் சிறு சிறு கீரல்கள் விழுகின்றன. கொஞ்சம் கவனமாக இருந்தால் பைபர் நல்லது. கீழே விழுந்தாலும் உடையாது. கண்ணாடி லென்ஸை விட பைபர் விலை மலிவானது.