HotPicks

நீங்க அடிக்கடி செல்லும் உணவகங்களில் இதுபோன்ற தில்லுமுல்லு வேலைகள் நடக்கலாம்! ஜாக்கிரதை!

Aug 10 2022 09:54:00 AM

அந்த காலத்து மக்கள் தங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் தாங்களே செய்துகொள்வார்கள். சாப்பாடு வைக்க நேரமில்லை என்று சொல்லிக்கொண்டு உணவகங்களுக்கு சென்று சாப்பிட மாட்டார்கள். அந்த காலத்தில் அந்த அளவுக்கு ஹோட்டல்களும் இருக்காது. ஆனால் இப்போது மக்கள் நாகரீகம் என்கிற பெயரில் சரியாக வீட்டில் சமைக்காமல் வெளிஉணவகங்களுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

fast-food-shop-night-foods

இன்றைய காலத்தில் நிறைய உணவகங்களில் பழைய உணவு பொருட்களையே சூடு பண்ணி கொடுத்து நம் தலையில் கட்டிவிடுகிறார்கள். உதாரணமாக பாஸ்ட் புட் கடைகளில் இரவு நேரத்தில் மிச்சமாகும் உணவே அப்படியே பிரிட்ஜில் வைத்து மறு நாள் சூடு செய்து கொடுக்கும் அவலமும் சில கடைகளில் தினமும் நடக்கத்தான் செய்கிறது.

fast-food-shop-night-foods

சிக்கன் கடைகளில் காலையில் வெட்டப்பட்ட கோழிக்கறியை மாலை வரை அப்படியே வைத்திருந்து சிக்கன் 65 மற்றும் சில்லி சிக்கன் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். பரோட்டா சிக்கன் குருமா தயாரிக்க பழைய கோழிகளின் கால்களை பயன்படுத்துகிறார்கள். முதல் நாள் சமைத்த பரோட்டாவை தண்ணியில் ஊறவைத்து அப்படியே கல்லில் போட்டு சுட வைத்து புது பரோட்டா என்று நம் தலையில் நிறைய கடைகளில் கட்டிவிடுவார்கள். இரவில் மிஞ்சு போன இட்லியை அடுத்த நாள் மீண்டும் சூடு பண்ணி புது இட்லி என்று நிறைய உணவகங்களில் நம் தலையில் கட்டிவிடுவார்கள்.

fast-food-shop-night-foods