காதல் என்று சொன்னவுடனே, ஏதாவது சினிமா காட்சி நினைவுக்கு வந்து விடும். 60களில் தொடங்கி, இன்றைய ஜோடிகள் வரைக்கும் அவரவர் காலத்துக்கு ஏற்ப சினிமா ஜோடிகள் நினைவில் வந்து போவாங்க. எங்க தாத்தாவிடம் கேட்டால், ஜெமினி கணேசன் - சாவித்திரி ஜோடியை சொல்லுவார். அதுவே அப்பா காலகட்டத்தில் நடிகர் பிரபு - குஷ்பு ஜோடி நினைவுக்கு வருவாங்க. எங்க காலத்துக்கு அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா நினைவில் வந்து போறாங்க. திரைப்படங்களில் ஜோடியாக வலம் வந்தவர்கள் சிலர், நிஜ வாழ்விலும் ஜோடியாகியிருக்காங்க. ஒரு சிலர் கிசு கிசுக்கள் மூலம் மட்டுமே ஜோடியாக பார்க்கப்பட்டனர். அந்த வகையில் நம்ம தாத்தா காலத்தில் தொடங்கி, இப்போது வரைக்கும் பிரபலமான காதல் ஜோடிகள் யார் யாருன்னு ஒரு லிஸ்ட்டாவே போட்டிருக்கோம். எப்படி இருக்குன்னு ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வரலாம்.
1. எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
இவங்க இருவருமே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள். சினிமாவில் எந்த அளவுக்கு புகழின் உச்சத்தை அடைந்தனரோ, அதே அளவுக்கு அரசியலிலும் ஈடுபாட்டோடு செயல்பட்டாங்க. இவர்கள் ஜோடியாக நடித்த அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன் பிளாக் பாஸ்டர் வெற்றி கண்டவை.
2. சிவாஜி கணேசன் - பத்மினி
1960-70களில் ரொம்ப இரசிக்கப்பட்ட ஜோடிகள். இவர்கள் இருவரும் இணைந்து மட்டுமே 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். தில்லானா மோகனாம்பாள், உத்தம புத்திரன், வியட்நாம் வீடு, தேனும் பாலும் போன்றவை மிகப்பிரபலமானவை.
3. ஜெமினி கணேசன் - சாவித்ரி
ஆன்-ஸ்கிரீனிலும், ஆப்-ஸ்கிரீனிலும் பிரபலமான ஜோடிகள் இவங்க. இவர்கள் நடிப்பில் பிரபலமான பாசமலர், கப்பலோட்டிய தமிழன், களத்தூர் கண்ணம்மா, மனம் போல மாங்கல்யம் போன்றவை மிகப்பிரபலமானவை.
4. கமல்ஹாசன் - ஸ்ரீ தேவி
இவர்கள் இருவரும் இணைந்து 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். அதில், பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், குரு போன்றவை மிகப்பிரபலமானவை.
5. ரஜினி - ஸ்ரீ பிரியா
பில்லா, பொல்லாதவன் மற்றும் தனிக்காட்டு ராஜா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஜோடிகள் இவர்கள். அன்றைய சூழ்நிலையில் ரஜினிக்கு பொருத்தமான நடிகையாக பார்க்கப்பட்டவர்.
6. பிரபு -குஷ்பு
கோலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் மிக முக்கியமானவர்கள். சின்னதம்பி, வெற்றி விழா மற்றும் மை டியர் மார்த்தாண்டம் போன்றவை இவர்கள் நடிப்பில் வெளியாகி மிகப்பிரபலமானவை.
7. அஜித் - ஷாலினி
அமர்க்களம் படம் இந்த ஜோடியை திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைத்தது. திருமணத்திற்குப் பிறகு ஷாலினி நடிப்பதை நிறுத்திய நிலையில், அஜித் இன்னும் தொடர்கிறார்.
8. விஜய் - சிம்ரன்
திரையுலகில் பல நடிகைகளுடன் நல்ல கெமிஸ்ட்ரியை பகிர்ந்து கொள்ளும் ஒரு நட்சத்திரம் விஜய். ஆனால் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் சிம்ரனுடனான அவரது காதல் ரொம்ப ரொமாண்டிக்கானது. சிம்ரனும், எல்லா காலத்திலும் தனக்கு பிடித்த சக நடிகராக விஜய்யை தேர்ந்தெடுத்தார்.
9. கார்த்தி - தமன்னா
இருவரும் காதல் ஜோடியாக நடித்த பையா திரைப்பட வெற்றிக்கு பிறகு, இவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப்போனது. ஒரு வருடம் கழித்து சிறுத்தை, பிறகு தோழா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
10. சூர்யா - ஜோதிகா
காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி மற்றும் பேரழகன் ஆகிய படங்களில் மிளிரும் இவர்களின் காதல், நிஜ வாழ்விலும் இணைய வைத்தது. தமிழ் சினிமாவில் மிக விரும்பப்படும் காதல் ஜோடியா இன்றைக்கு வரைக்கும் இருக்காங்க.
இவர்களைத் தவிர இன்னும் வேறு யாராவது இருந்தால், கொஞ்சம் கீழே சொல்லுங்க. விடுபட்டவங்க பெயர்களையும் இணைத்து, அடுத்து ஒரு பட்டியல் போடுவோம்.