Her

வெறும் ஸ்ட்ரா பெர்ரி பழங்களை பயன்படுத்தி மட்டுமே இந்த நிறத்திற்கு வந்துவிட்டாராம்! அடுக்கு அடுக்கு அடுக்கிட்டே போமா!

Oct 22 2021 04:50:00 PM

சமீபத்தில் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் நடிகை தர்ஷா குப்தா, ஆரம்பத்தில் சீரியலில் கிடைக்கும் ரோலில் நடித்து வந்தவர். தற்போது மெல்ல மெல்ல முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார். தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார். ஆரம்பத்தில் உள்ள தர்ஷா குப்தாவிற்கும் இப்போதுள்ள தர்ஷா குப்தாவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அந்த பெண்ணா இவர்? என வியக்கும் அளவிற்கு ஆளே தலைகீழாக மாறிவிட்டார். தோலின் நிறம் திடீரென மாறிவிட்டது. இப்படி மாநிறத்தில் இருந்த நடிகை திடீரென ஹன்சிகா நிறத்திற்கு மாறினால் காரணம் என்னவாக இருக்கும்? கண்டிப்பாக ஏதாவது ஸ்கின் ச ர்ஜரி செய்திருக்க வேண்டும் இல்லையெனில் லேசர் போன்ற ஏதாவது ஒயிட்னிங் ட் ரீட்மெண்ட் எடுத்திருக்க வேண்டும். இல்லையா?

dharsha-gupta vijay-tv

ஆனால் முழுக்க முழுக்க இயற்கை முறைகளை பயன்படுத்தி தான் இந்த அளவிற்கு நிறம் கூடியுள்ளார் என கூறினால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். அப்படித்தான் தான் கொடுக்கும் பேட்டிகளில் தன்னுடைய பியூட்டி சீக்ரெட்டை உலறி கொண்டிருக்கிறார். தான் தினமும் ஸ்ட்ரா பெர்ரி ஜூஸை குடித்துதான் இந்த அளவிற்கு நிறம் மாறியுள்ளாராம். ஆனால் இந்த ஹீரோயின்கள் மட்டும் ஏன் தங்களது ஸ்கின் கேர் ரொட்டின் பற்றி பொய்யாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? 

dharsha-gupta vijay-tv

நாம் இதை நம்ப வேண்டுமாம்? என்னவெல்லாம் சொல்கிறார்கள்? இவர்கள் கூறும் இந்த கம்பி கட்டும் கதையெல்லாம் நம்பி நம்ம பெண்களும் வருட கணக்கில் ஜூஸாக குடித்து கொண்டிருப்பார்கள். ஆனால் அங்கு ஒரு மாற்றமும் இருக்காது. மீண்டும் மார்க்கெட்டில் கிடைக்கும் எல்லா ஒயிட்னிங் கிரீம்களை வாங்கி பயன்படுத்தி கொண்டிருப்பார்கள். இறுதியில் கொஞ்சம் கூட நிறம் மாறியிருக்காது. அழகிற்காக பயன்படுத்திய நேரத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி இருந்தால் கூட, வாழ்க்கையில் முன்னேறி இருக்கலாம் என விரக்தி அடையும் நிலைக்கு வந்திருப்பார்கள். 

dharsha-gupta vijay-tv

அம்மா, அப்பா என்ன நிறமோ அதேநிறம் தான் குழந்தையும் இருக்கும். திடீரென மாற்ற சொன்னால் அது இயற்கைக்கு மாறானதாக தான் இருக்கும். ஹீரோயின்கள் தொழில்ரீதியாக தன்னை அழகாக காட்டிக்கொள்ள சில செயற்கை முறைகளை கையாளுகின்றனர். அப்படி அந்த வழியில் செல்பவர்கள் உண்மையை சொல்லிவிட்டு போகலாமே? எதற்காக வீண் பொய்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? நிஜமாகவே வாழ் நாள் முழுக்க வெறும் ஸ்ட்ரா பெர்ரி பழங்களை பயன்படுத்தி மட்டுமே இந்த நிறத்திற்கு வந்துவிட்டார்களா? இதை நாம் நம்ம வேண்டுமாம்!