pennoviyam
notification 20
HotPicks
உண்மையில் இந்த கழுகின் குணாதசியம் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கும்!

இந்த உலகில் எத்தனையோ வகையான பறவைகளும், விலங்குகளும் வித்யாசமான உயிரினங்களும் வாழ்ந்துவருகின்றன. அந்த வகையில் ஒரு வித்யாசமான பறவை இனத்தை பற்றி இங்கு பார்க்கலாம். ஆப்ரிக்க, ஐரோப்பிய, ஆசிய மலை முகடு காடுகளில் தாடிக்கார கழுகு என்ற ஒருவகை கழுகினம் வாழ்ந்துவருகிறது.

bearded-vulture-life-style

இந்த கழுகினத்திற்கு மனிதர்களை போல தாடி இருக்கும். அதனால் தான் இந்த கழுகை தாடிக்கார கழுகு என்று அழைக்கிறார்கள். இந்த கழுகு தான் உண்ணும் உணவில் 70 முதல் 90 சதவீதம் விலங்குகளின் எலும்பை தான் உணவாக உண்ணுகிறது.

bearded-vulture-life-style

காட்டில் வாழும் மற்ற விலங்குகள் வேட்டையாடி தன்னுடைய இரையை சாப்பிடும் வரை இந்த கழுகுகள் காத்திருக்கும். முழு மாமிசத்தையும் மற்ற விலங்குகள் சாப்பிட்டு முடித்த பிறகு அந்த இடத்திற்கு இந்த கழுகு செல்லும். அங்குள்ள எஞ்சிய எலும்புகள் தான் இந்த தாடிக்கார கழுகுகளின் பிரதான உணவு. சிறிய எலும்புகளை முதலில் கொத்தி சாப்பிட்டு விடுகிறது. பின்னர் பெரிய எலும்புகளை தூக்கிக்கொண்டு வானத்தில் பறக்கிறது. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு சென்றவுடன் மேலிருந்து எலும்பை தரையை நோக்கி வீசுகிறது.

bearded-vulture-life-style

கீழே விழுந்த எலும்பு வந்த வேகத்தில் நொறுங்கிவிடும். பின்னர் அந்த எலும்பையும், எலும்பின் உள்ளே உள்ள மஜ்ஜையையும் சாப்பிடுவது தான் இந்த பறவையின் வேலை. காட்டில் இறந்த மிருகங்களின் உடல்கள் நோயை பரப்பாமல் இருக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும் இந்த பறவை பெரிதும் உதவுகிறது.

bearded-vulture-life-style
Share This Story

Written by

Karthick View All Posts