ஒரு நாட்டின் தேசியக்கொடி என்பது அந்த நாட்டின் ரொம்ப புனிதமான ஒரு விஷயம். அந்த தேசிய கொடியை யாரும் அவமதிப்பு செய்யக்கூடாது, செய்திடவும் முடியாது. பல நாடுகளில் தேசிய கொடியை அவமதிப்பு செய்தால் சட்டம் அவங்க மேல பாஞ்சிடும். நம்ம இந்தியாவிலும் தேசிய கோடியை அவமதிப்பு செய்வது என்பது ஒரு குற்றம் தான்.

ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் இதுக்கு நேர் மறையான விஷயங்கள் தான் நடக்குது. உதாரணமாக flag thongs என்ற ஒரு நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டின் கொடியை கால் செருப்பில் அச்சிட்டு பல வருடங்களாக விற்பனை செய்து வருகிறது. குயின்ஸ்லாந்து மாகாணத்தை தலைமை இடமாகக்கொண்டு அந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இதுவரை இந்த நிறுவனத்தை எதிர்த்து எந்த ஆஸ்திரேலியா மக்களும் போராட்டம் நடத்தியதில்லை.

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்கெட் என்னும் நிறுவனம் அந்த நாட்டின் கொடியை பெண்கள் அணியும் பிகினி ஆடையில் அச்சிட்டு விற்று வருகிறது. அந்த நாட்டில் 7 கிலோமீட்டருக்கு இடைவெளியில் ஒரு டார்கெட் நிருவனத்தின் கடை உள்ளது. நம்ம நாட்டில் குடியரசு தினம் கொண்டாடும் நேரத்தில் தான் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா டே கொண்டாடப்படும். அந்த தினத்தில் ஆஸ்திரேலியா கொடி அச்சிடப்பட்ட எல்லா பிகினி ஆடைகளும் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிடும்.
