Her

படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு என்ன காரணம்? சமூக ஊடகத்தில் பிரபல நடிகை ஓப்பன் டாக்!

Sep 05 2021 10:42:00 AM

வெள்ளித்திரையில் கதாநாயகிகளுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதைப் போலவே சின்னத்திரை ஹீரோயின்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து நடிகை ஆலியா மானசா தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

alya-manasa education-discontinued

அவர் ஆரம்பத்தில் நடனக் கலைஞராக இருந்தார். ராஜா ராணி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை ஆலியா மானசா காதலித்து வந்தார். பல சிக்கல்களை தாண்டி ஒருவழியாக அவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கினார் ஆலியா மானசா.

alya-manasa education-discontinued

அவருக்கு தற்போது அய்லா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த சில நாட்களுக்கு ஓய்வு எடுத்த ஆலியா, இப்போது மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

alya-manasa education-discontinued

அவருக்கு சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்களுடன் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆலியா மான்சா அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை கொடுக்கும் பழக்கம் உடையவர்.

alya-manasa education-discontinued

அந்த வகையில் ரசிகர்களில் ஒருவர்நீங்கள் எவ்வளவு படித்தீர்கள்?’ என்று சமூக வலைதளத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதற்கு ஆலியா மானசா நான் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். அதன் பிறகு நான் எத்திராஜ் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்க சேர்ந்தேன்.

alya-manasa education-discontinued

ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். தங்களது கல்வி குறித்து மறைப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கும் சூழலில் ஆலியா மானசா தனது கல்வி குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.