Spellbound

நாயகி சீரியலில் வரும் நடிகை வித்யா எவ்வளோ பெரிய ஆள் தெரியுமா? படித்த படிப்புக்கு இந்நேரம் சயின்டிஸ்ட் ஆயிருக்க வேண்டிய பொண்ணு! தமிழ் சினிமா கண்டிராத ஆல்ரவுண்டர்!

Nov 09 2021 01:17:00 PM

நடிகர், நடிகைகள் சினிமாவில் நடிப்பதோடு அவர்களது வருமானத்தை நிறுத்திவிடுவதில்லை. கோடி, கோடியா வரும் சம்பளத்தை வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்து, அதனை பன்மடங்காக்க வழி தேடிக்கிட்டே இருப்பாங்க. பெரும்பாலும் ஹோட்டல், ரியல் எஸ்டேட், ரிசார்ட், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது. நடிகர் வடிவேலு கூட அவரது, சொந்த ஊரான மதுரையில், சொகுசு வசதிகளுடன் கூடிய ஸ்டார் ஹோட்டல் நடத்தி வருகிறார். இப்படி நடிகர்கள், சம்பாதித்த பணத்தை தான் வெவ்வேறு வகையில் முதலீடு செய்கின்றனரே தவிர, மற்ற எதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை.

vidya thadam tamil-movie

ஆனால் ஒரு சிலர் திரைத்துறை அல்லாமல் மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் என்னைக் கவர்ந்தவர் தடம் பட நாயகி வித்யா. அப்படத்தில் பெண் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். தற்போது சன் டி வியில் வரும் நாயகி சீரியலில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இதுவரை இவரைப்போன்ற அறிவியலாளரை பார்த்திராது என எண்ணுகிறேன். தடம் பார்த்து திரும்பியபின் இவரைப்பற்றி தேடியபோது கிடைத்த அதிர்ச்சி, அவர் பெயர் பின்னால் இருந்த டாக்டர் பட்டம். மூலக்கூற்றியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

vidya thadam tamil-movie

ஸ்டெம் செல் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி, International Journal of Cell Therapy இதழில் வெளிவந்துள்ளது. இன்றும் சீரியல், அலுவலகம், ஆராய்ச்சி, அவ்வப்போது பட வாய்ப்புகள் என ஆல்ரவுண்டராக கலக்குகிறார். ஒருமுறை பேஸ்புக் லைவ் பேட்டியில் வந்த இவர், லைவ் முடித்துவிட்டு வேலை செய்வதாகதான் குறிப்பிட்டு இருந்தார். சினிமா தவிர விளம்பர படங்களிலும் லோலோச்சி வருகிறார். "சுவை" என்கிற நெய் தயாரிப்பு பிராண்ட்டிற்கு விளம்பர தூதராக நடித்திருக்கிறார். மாடல் அழகியாக உள்ளே வந்து, இன்னைக்கு ஆராய்ச்சியாளர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

vidya thadam tamil-movie

கேரளா மாநிலம் ஆலப்புழாவிலிருந்து வந்து, தமிழில் சைவம் திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததில் அறிமுகம் கிடைத்தது. பசங்க 2 திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களால் கண்டுகொள்ளப்பட்டார். மாடல் அழகியாக இருந்தபோது, எண்ணற்ற விளம்பரங்களில் நடித்தார். தடம் திரைப்படத்தில் சப்இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அவருக்கென அளவு எடுத்து தைத்தது மாதிரி அமைந்திருக்கும். நாயகனை விசாரிப்பதிலும், விழி அசைவிலும் தெறிக்கவிட்டிருப்பார். நடிகை சாய் பல்லவியும் மருத்துவம் படித்த டாக்டர் என்றாலும், இந்தியாவில் பணியாற்ற இன்னும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி உள்ளது.