Relations

முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும்! 90ஸ் கிட்ஸ் நம்பிக்கொண்டிருந்த 5 அபூர்வமான காமெடிகள்! இன்னும் எங்கள சின்ன குழந்தையாவே நினைச்சீங்களா?

Oct 30 2021 12:14:00 PM

நீங்க ஒருத்தர பிரைன் வாஸ் பண்ணனும்னா, அவங்க 90ஸ் கிட்ஸ்சா இருந்த ஈஸியா பண்ணிடலாம். அவ்வளோ அம்மாஞ்சி பிறவிகள். இன்னைக்கு படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக சினிமாவிலும், வெப்சீரியல்களிலும் காட்டி, ஒரு பத்து வயது சிறுவனுக்கு கூட எப்படி குழந்தை பிறக்கிறது என்ற உண்மை தெரிகிறது. ஆனால் 90ஸ் கிட்ஸ் காலம் எப்படி இருந்தது என, சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பத்து வயதில், மணலில் இட்லி சுட்டு விளையாடிக்கொண்டிருந்த அற்புத படைப்பாளிகள் அவங்க. 90ஸ் கிட்ஸ் 25 வயதில் செய்யக்கூடிய காரியத்தை, ஒரு 12 வயது சிறுவன் அசால்ட்டா செய்யிறான் என்றால், வரும் தலைமுறை ரொம்பவே அப்டேட் ஆகி இருக்காங்க. பாவம், இவங்க தான் , இன்னும் திருவிழா ராட்டின தூரியை பார்த்தாலும், வெச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கும், வளர்ந்த குழந்தைகளாகவே இருக்காங்க. அப்படி அபூர்வ பிறவிகளான 90ஸ் கிட்ஸ் குழந்தை பருவத்தில் எப்படி எல்லாம் ஏமாந்து இருக்காங்க. என்பதை ஒரு தொகுப்பா பார்க்கலாம்.

1. முத்தம் கொடுத்தா குழந்தை பிறந்துரும்

kiss 90s-kids memories

இப்போ வரும் வீடியோக்கள் போல, எந்த சினிமாவிலும் குழந்தை பிறப்பு பற்றிய இரகசியம் எல்லாம் சொல்ல மாட்டாங்க. முத்தம் கொடுக்கும் போது, இருவரின் எச்சில் பரிமாறிக்கொள்ளப்படுவதால், அதிலிருந்து குழந்தை பிறப்பதாக நம்பிக்கொண்டிருந்தனர்.

2. சொம்பு உருண்டால், அதுவே முதலிரவு

kiss 90s-kids memories

சத்தியமா சொல்றேன். முதலிரவு பற்றிய புரிதலே எனக்கு 15 வயதுக்கு மேல் தான் வந்தது. அதற்கு முன்னர், திரைப்படங்களில் காட்டப்படுவதைப்போல கல்யாணமான ஜோடிகள் கதவை சாத்திக்கொண்டு, சொம்பு உருண்டால், அதுவே முதலிரவு என நினைத்துக்கொண்டிருந்தேன்.

3. நாய் கடித்தால், தொப்புளை சுற்றி 16 ஊசி போட வேண்டும்

kiss 90s-kids memories

அந்தக் காலத்தை பொறுத்தவரையில் இது உண்மையா, பொய்யான்னு தெரியாது. ஏன்னா என்னை இது வரையில் நாய் கடித்ததில்லை. ஆனால் வாய் வழியாக பரவிய நம்பிக்கை இது. ஊசிக்கு பயந்தே நாய் என்றால், இன்னமும் பயம் எனக்கு.,

4. ஓணான் கடித்தால், 7 ஊரு மலத்தை சாப்பிட வேண்டும்

kiss 90s-kids memories

ஓணானுக்கு அதிக தூக்குத்தண்டனை நிறைவேற்றிய லிஸ்ட்டில் 90ஸ் கிட்ஸ் முதலிடத்தில் வருவாங்க. இந்த பாவத்துக்கு எமதர்மராஜா என்ன செய்யப்போறாரோ தெரியல. ஓணான் இனம் அழிவதை தடுக்க நினைத்த யாரோ ஒருவர், "ஓணான் கடித்தால் 7 ஊரு மலத்தை சாப்பிட வேண்டும்" என பரப்பி விட்ருக்காங்க. அதையும் நம்பினாங்க அப்பாவி குழந்தைகள்.

5. பென்சில் சீவிய தூளை சுடுதண்ணீரில் போட்டால் ரப்பராக மாறும்

kiss 90s-kids memories

இதெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது ரொம்ப பேமஸ். ரப்பர் வாங்க காசு செலவாகும்னு சொல்லி, கிளாஸ் முழுக்க பென்சில் சீவிய தூளை சேகரித்து, சுடு தண்ணீரில் போட்டுப் பார்த்திருக்கிறேன். பாத்திரத்தில் குப்பையை கொட்டினேன்னு சொல்லி, அம்மாகிட்ட அடி வாங்கினது தான் மிச்சம்.

இந்த மாதிரி நிறைய நம்பிக்கைகள் இருக்கு. இப்போதைக்கு எனக்கு நியாபகத்தில் உள்ள வரை கூறியுள்ளேன். உங்களுக்கு ஏதாவது வித்தியாசமாக தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.