Her

இனி பாவாடை தாவணி என்ற உடுப்பே இருக்காது! முடிந்தவரை படத்தில் மட்டும் பார்த்து கொள்ளுங்க! ஆடை உலகத்தில் பிரளயத்தை ஏற்படுத்திய உடை!

Oct 18 2021 10:15:00 PM

பாவாடை தாவணி இந்த காஸ்டிம்யூமை, இனி பேன்சி ட்ரஸ் காம்பிடேஷன் இல்லையென்றால் மியூசியத்தில் தான் இனி பார்க்க முடியும். ஏனெனில் நாகரீக மாற்றத்தால் பெண்கள் ஆடை மாற்றத்தை நோக்கி அடுத்தடுத்த அப்டேட்டுகளை நோக்கி ஓடிகொண்டிருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் வாழ்க்கை ஒரு வட்டம் தானே?  அங்க சுத்தி இங்க சுத்தி இறுதியாக, அரைத்த மாவை தானே அரைக்க போறாங்க? அப்படி வந்தது தான் லேகன்ஹா எனும் பாவாடை தாவணி. கடை வீதி சென்று பாவாடை தாவணி என கேட்டால் அதெல்லாம் இல்லைங்க அது ட்ரெண்ட் இல்லை, அதற்கு பதிலா அது மாதிரியே இன்னொரு உடுப்பு இருக்குனு நம்ம பாவாடை தாவணி தான் எடுத்து போடறாங்க! கேட்டா லேகன்ஹாங்கறாங்க! இதுவும் நம்ம பாவாடை தாவணி மாதிரி ரவிக்கை, பாவாடை, தாவணி மாதிரி தான் இருக்கு! என்ன கொஞ்சம் வேலைப்பாடு அதிகம். என்ன சொல்லுங்க! அந்த காலத்து புள்ளைங்க வயத்திற்கு வந்தது முதல் கல்யாணம் ஆகற வரை தாவணி, பாவாடை தான் உடுத்துவாங்க. ஆனால் இந்த காலத்தில்? சரி யார் தான் தாவணி, பாவாடை உடுத்துகிறார்கள் என்றால் படத்தில் வரும் ஹீரோயின்கள் மட்டும் தாங்க. அப்படி எந்த ஹீரோயினுக்கு தாவணி, பாவாடை பொருத்தமாக உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க! 

divya half-saree vadivelu

1. முதலில் காதல் சந்தியா, நன்றாக வளர்ந்து வந்திருக்க வேண்டிய நடிகை. ஆனால் மேரேஜ் ஆகி செட்டில் ஆகிவிட்டார். பொதுவாக பாம்பே நடிகைகள் தாவணி, பாவாடை கட்டினால் அப்பட்டமாக முகம் காட்டிக்கொடுத்துவிடும். இந்த பொண்ணு நம்ம ஊரு இல்லை என்று. ஆனால் சந்தியா தாவணி, பாவாடை கட்டினால் அக்மார்க் நம்ம ஊரு பொண்ணு மாதிரி தான் இருப்பார்.     

divya half-saree vadivelu

2. அடுத்து நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்க திவ்யா. இந்த காலத்து அழகான கிராமத்து பெண் தாவணி பாவாடை கட்டினால் எப்படி இருக்கும்? இதெல்லாம் நடக்காது. ஆனால் ஒரு கற்பனை தான். ஒருவேளை இந்த காலத்து பெண்கள் தாவணி, பாவாடை கட்டினால் திவ்யா போல் தான் இருப்பார்கள். 

divya half-saree vadivelu

3. அடுத்து சீரியல் நடிகை ஜீ தமிழ் புகழ் ரவுடி பேபி ஆயிசா. தாவணி, பாவாடையோடு செய்த போட்டோ ஷூட் தான் படு வைரல். உயரமான பெண்கள் தாவணி, பாவாடை கட்டினால் எப்படி இருக்கும் என்பதை காட்டிவிட்டார்.

divya half-saree vadivelu

4. அடுத்து நயன்தாராவிற்கு தான் தாவணி, பாவாடை அப்படியொரு பொருத்தமாக இருக்கும். யாரடி நீ மோகினி படத்தில் தலைநிறைய பூவைத்துக்கொண்டு, ஒவ்வொரு கையிலும் இரண்டு டஜன் வளையல் போட்டுகொண்டு, இடுப்பு தெரிந்தும் தெரியாமல் அமுக்கமான க வர்ச்சியை தாவணி, பாவாடையில் காட்டும் வல்லமை நயன்தாராவுக்கு மட்டுமே உண்டு. 

divya half-saree vadivelu

5. அடுத்து ஒஸ்தி பட ஹீரோயின் ரிச்சா, தாவணி, பாவாடையில் சும்மா கும்முனு ஒரு பொண்ணு. ரிச்சாவை தாவணி, பாவாடையில் பார்க்கும்போது, பெண்களுக்கே ஆர்வம் பிறக்கும். நாமளும் அடுத்தமுறை தாவணி, பாவாடை கட்டிக்கொள்ள வேண்டும் என்று. 

divya half-saree vadivelu

6. அடுத்து தாவணி, பாவாடையில் பட்டைய கிளப்பும் ஹீரோயின் அசின் தாங்க. எத்தனை படங்களில் தாவணி, பாவாடையில் நடித்துவிட்டார்? அப்படியே உள்ளூர் பெண் போன்றே சாயல்.

divya half-saree vadivelu

7. அடுத்து முக்கியமான ஆளு. யாருக்கு தாவணி, பாவாடை பொருத்தமாக உள்ளதோ தெரியாது. ஆனால் இந்த ஹீரோயினுக்கு கண்டிப்பாக மேட்ச் ஆக இருக்கும். தாவணி, பாவாடையில் இந்த ஹீரோயினை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. யாரை சொல்கிறேன் என தெரிந்திருக்கும். நம்ம வடிவேலு சார் தாங்க.