Her

குண்டாக இருக்கும் பெண்கள் எப்படி உடை அணிந்தால் அம்சமா இருக்கும்? எவனோ சொல்லிட்டு போறான், இதை அணிந்தால் நீங்க தேவதை மாதிரி இருப்பீங்க!

Mar 19 2021 03:53:00 PM

நீங்க குண்டா பார்க்கும் எல்லா பெண்களுமே சாப்பிடுவதால் குண்டாவதில்லை. குண்டாக இருக்கும் பெண்கள் சோம்பேறித் தனத்தாலோ, இல்லை மிகுதியாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பதாலோ குண்டாக இருப்பது இல்லை. சிலருக்கு ஹா ர்மோன் குறைபாடுகள் இருக்கலாம். இன்னும் உடல் சார்ந்த பல பிரச்சனைகள் இருக்கலாம். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு, அவர்களை அறியாமலேயே குண்டாகும் பெண்களும் உண்டு. அதனால், இனிமேல் எந்த பெண்ணையும், அவர்களின் உருவ அமைப்பை வைத்து கே லி செய்ய வேண்டாம். அவரவர் கஷ்டம் அவரவருக்கே தெரியும்.

dress fat women

குண்டாக இருக்கும் பெண்கள் எப்படி உடை அணிய வேண்டுமென கேட்டால், அவர்கள் மனதுக்கு பிடித்த உடையை அணிய சொல்வேன். ஆனால் ஒரு சில பெண்களை சமீபத்தில் கண்டதில் இருந்து, ஆடை பற்றி கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. குண்டாகவுள்ள பெண்கள், முடிந்த வரையில் லெக்கின்ஸ் தவிர்த்துவிடுவது நல்லது. அப்படியே அணிந்தாலும், நன்றாக விரிவடையக்கூடிய எலாஸ்டிக் டைப்பா பார்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். இறுக்கமான லெக்கின்ஸ் அணியும் போது, சதை முழுக்க ஒன்று சேர்ந்து, பார்க்கவே அசிங்கமாக தெரிகிறது.

dress fat women

போகும் இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தவாறு கண்ணியமாய் உடை அணிந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. எவ்வளவு குண்டாக இருந்தாலும், சேலை அணியும் பெண்கள் அம்சமா தெரிகின்றனர். குண்டான ஒரு பெண்ணின் புகைப்படத்தை சேலையிலும், சுடிதாரிலும் ஒரு சேர வைத்துப்பார்த்தால், நான் சொல்லும் வித்தியாசம் புரியும். எப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களையும் அழகாக காட்டக்கூடியது சேலை. எனக்கு தெரிந்து, கல்யாண விசேசங்களில் மட்டும் தான் பெண்களை சேலையில் பார்க்கிறேன்.

dress fat women

அதன் பிறகு, சுடிதார், ஜீன்ஸ், டாப்ஸ், வெஸ்டர்ன் ஆடையில் தான் பார்க்க முடிகிறது. சேலை அணிந்து, தலையில் கொஞ்சம் மல்லிகைப்பூ வைத்து,  நெற்றியில் குங்குமம் இட்டுப்பாருங்கள். வேறு எந்த ஆடையிலும் பார்க்க முடியாத அழகை அதில் காண முடியும். குண்டாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் நடுத்தர உடல்வாகு கொண்ட பெண்கள், புடவை, சுடிதார், ஜீன்ஸ் எது அணிந்தாலும் நன்றாக தெரியும். ஒல்லியாக இருக்கும் பெண்கள், நவீன வகை ஆடை எதுவாக இருந்தாலும் அணியலாம். உடை அணிவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்.