Relations

நடிக்காதீங்க! இந்த மாதிரி பெண்கள் உங்களைச்சுற்றியும் இருக்கலாம்! மனரீதியாக அப்படி இருக்க வைக்கும் 10 அறிகுறிகள்!

Nov 08 2021 12:41:00 PM

பெண்கள் பல விதம். அவர்களில் ஒவ்வொருவரும் தனி குணம். பெண் என்றாலே இப்படித்தான் இருப்பாள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது. அதிலும் தான் மட்டும் தான் எல்லாமேன்னு நினைக்கும் ரூடான பெண்களை, எந்த கேட்டகிரியில் சேர்ப்பதுன்னே தெரியல. உண்மைய சொல்லணும்னா, அவங்க ரொம்ப வீக் பார்ட்டிகளாம். தங்களுடைய குறை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, மினிக்கிக்கொள்வது, ஓவர் ஆட்டம் போடுவது, தன்னை பந்தாவாக காட்டிக்கொள்வது போன்ற அலப்பறைகள் எல்லாம் செய்வாங்க. அந்த மாதிரி ஒரு பெண் பலவீனமாக இருக்கிறாள் என்றால், அதற்கான அறிகுறி என்னவென்று அடுத்து பார்க்கலாம்.

girls rude office

1. தன்னை யாருமே புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் ரொம்ப அதிகமா இருக்கும். தன்னைவிட மற்ற எல்லோரும் சந்தோஷமா இருக்காங்களேன்னு மனதில் நினைத்துக்கொண்டே இருப்பாங்க.

2. தான் அதிகம் நேசிக்கும் ஒருவர், திடீரென தன்னைவிட்டு விலகிவிடுவார்களோ என்ற உணர்வு அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். தனக்குப்பிடித்த நண்பர்களோ அல்லது காதலரோ தனக்கு மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டுமென மனது உறுதிக்கொண்டே இருக்கும்.

3. மனதளவில் பலவீனமான பெண்கள், எவ்வளவு கோபம் வந்தாலும் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். குடும்பத்தினரை தவிர்த்து எங்கு சென்றாலு, முக்கியமாக பணி புரியும் இடத்திலும் கோவம் கொள்வதே இல்லை. 

4. ஒருவர் தன்னைவிட அறிவாளி எனத்தெரிந்தால், அவர்களிடம் பேசவே மாட்டாங்க. தனக்கு தெரிந்ததைவிட ஒவருக்கு குறைவாக தான் தெரியும் என்றால் அவரிடம் நிறைய பேசுவார்கள்.

5. மனதால் பலவீனமான ஒரு பெண், எதற்கெடுத்தாலும் பயப்படுவாங்க என தப்புக்கணக்கு போடக்கூடாது. உண்மையில் தைரியமான பெண்கள் இருட்டுக்கு பயப்படுவாங்களாம். ஆனால் மனதால் பலவீனமான பெண்கள், இருள் சூழ்ந்த சூழலை ரொம்ப விரும்புவாங்களாம்.

6. ஆடை உடுத்தினாலோ, இல்லை அலங்காரம் செய்து கொண்டாலோ சின்ன மிஸ்டேக் நடந்தாக் கூட மனசு தாங்காது. தான் செய்யும் எல்லா செயல்களும் பர்பெக்டா இருக்கணும்னு நினைப்பாங்க.

7. நான் கொஞ்சம் திமிரானவள் என தன்னைக் காட்டிக்கொள்ள முற்படும் பெண்களில் பாதிபேர் மனதளவில் பலவீனமானவர்கள் தான். காரணமே இல்லாமல் திடீருன்னு கண்ணாடி போடுவாங்க. கேட்டால் ஸ்டைலுக்குன்னு சொல்லுவாங்க. உண்மையில் எதற்காக போடுறாங்கன்னு வெளியில் சொல்லவே மாட்டாங்க.

8. திடீர் திடீருன்னு மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு காரணத்திற்காக கண்ணீர் வரும். யாராவது அதனை கவனித்துவிட்டால், உடனே சிரிப்பு வந்துவிடும். அழுகையையும் சிரிப்பையும் அடுத்தடுத்து இவர்களால் வெளிப்படுத்த முடியும்.

9. யார் கூடவும் சோசியலா இருக்கணும் என்று நினைக்கவே மாட்டாங்க. அதிகம் ஒதுங்கி வாழவே முயற்சி செய்வார்கள். குறுகிய வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்வார்கள்.

10. தன்னை தானே திமிர் பிடித்தவர்களாக, கெட்டவர்களாக காண்பித்துக் கொள்ள முற்படும் பெண்கள் எல்லாருமே மனதளவில் பலவீனமானவர்கள் தான்.

நம்மை சுற்றி நிறையப்பெண்கள் இந்த மாதிரி இருப்பாங்க. ஏன் தான், இவங்க எல்லாம் இப்படி இருக்காங்கன்னு நினைக்கத்தோன்றும். இனி அப்படி நினைக்காதீங்க. அவங்கே குணமே அப்படித்தான்.