Relations

30 வயதுக்கு பிறகு க*ர்ப்பமாகும் பெண்களுக்கு மட்டும் எழும் பி*ரச்சனை? வசதி, வாய்ப்புக்களை பார்க்கும் பெண்கள் இதையும் பரிசோதித்து கொள்ள வேண்டாமா?

Jul 10 2021 02:41:00 PM

நாகரிகமும் வளர்ச்சியும் அதிகமாக உள்ள இந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் தாமதமாக திருமணம் செய்வது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஆண்களும் பெண்களும் தங்களின் கடமைகளை நிறைவேற்றிய பிறகோ அல்லது வசதி வாய்ப்புகள் வந்த பிறகோ திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். இது நல்ல விஷயமாக தெரிந்தாலும் குழந்தை பிறப்பில் இது பா*திப்பை ஏற்படுத்திவிடும். 

tamil-mom new-mom

பொதுவாக 30 வயதிற்கு பிறகு பெண்களின் க*ருமுட்டை வளர்ச்சி குறைந்துவிடுகிறது. மேலும் க*ருப்பை பலவீனமாகி விடுகிறது. அதேபோல் ஆண்களுக்கும் உ*யிரணுவின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. இது குழந்தை பிறத்தலில் பல சி*க்கல்களை உண்டாக்குகிறது. அந்த சி*க்கல்களை எவ்வாறு சரி செய்ய வேண்டுமென இங்கு பார்ப்போம்.

tamil-mom new-mom

க*ருச்சிதைவு பெண்களை உ*டலளவிலும் மனதளவிலும் பெருமளவு பாதித்துவிடுகிறது. 30 வயதிற்கு பிறகு க*ர்ப்பமாவது க*ருச்சிதைவிற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரண பெண்களை விட நீங்கள் 10 மடங்கு கவனமாக இருக்க வேண்டும். சிறிதளவு வித்தியாசம் தெரிந்தாலும் உடனே உங்கள் ம*ருத்துவரை அணுகுங்கள். சத்தான உணவுகளும் நல்ல ஓய்வும் உங்கள் உ*டல் நலனை மேம்படுத்தும். 

tamil-mom new-mom

அடுத்து, க*ர்ப்பகால நீ*ரிழிவு. இது தற்காலிகமானது. 24 வாரங்களில் வரக்கூடிய இந்த நீ*ரிழிவு உங்களுக்கு முன்கூட்டியே வரும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் 30 வயதிற்கு மேல் க*ர்ப்பமாகும் பெண்களுக்கு இரண்டு மடங்கு உயர் இ*ரத்த அழுத்தம் ஏற்படும் நிலை உள்ளது. இதை ம*ருத்துவரிடம் நன்கு ஆலோசிக்க வேண்டும். சில நேரங்களில் குறைப்பி*ரசவம் நிகழவும் வாய்ப்பு உள்ளது.

tamil-mom new-mom

இந்த சமயத்தில் கணவர்கள் தங்கள் மனைவிகளை அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நல்ல உணவும் ஓய்வும் தைரியமும் தரவேண்டும். வீடு வேளைகளில் இருந்து அவர்களுக்கு விடுப்பு தாருங்கள். பயணங்களை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு கவனமாக இருந்து வந்தால் தாயும் சேயும் மேற்கண்ட பி*ரச்சனைகளில் சிக்கி கொள்ளாமல் நலமாக இருப்பார்கள். முடிந்த வரை சரியான வயதில் திருமணம் செய்வதே சிறந்தது. 21 முதல் 27 வயதுக்குள் பி*ரசவம் என்பது பாதுகாப்பான ஒன்று. அதற்கு மீறி போகும்போது கூடுதல் கவனமும் அக்கறையும் அவசியம். 

tamil-mom new-mom

இந்த காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு திருமணமே 26 வயதை தாண்டி தான் நடப்பதால் கண்டிப்பாக பெரும்பாலான பெண்கள் குழந்தைக்கு தயார் ஆகும் முன்னரே அவர்களது உ*டலில் உள்ள குறைபாடுகள் குறித்து ம*ருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ளலாம். சில பெண்களுக்கு ரத்*தம் குறைவாக இருக்கும், சிலருக்கு ஊட்டச்சத்து குறைவாக இருக்கும், சிலருக்கு க*ருப்பை பல*வீனமாக இருக்கும். குழந்தைக்கு தயாராகும் முன்னரே, இது போன்ற குறைகளை ம*ருத்துவரிடம் ஆலோசித்து உ*டலை சோதனை செய்துகொள்கையில், க*ருச்சிதைவுகளுக்கு வாய்ப்புக்கள் குறைவாகிவிடும்.