Her

#Pregnancy symptoms: கர்ப்பிணிகள் ஏன் சிறுநீரை அடக்கக்கூடாது? குழந்தையை வடிவாக்கும் மந்திரங்கள்!

Apr 29 2020 10:53:00 AM

இந்த காலத்தில் குழந்தை வரம் வேண்டி பலரும் கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கும் வேளையில், பெற்ற வரத்தை முறையாக காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கர்ப்பமான பெண்ணை, ஒரு குழந்தையை பேணி காப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும். இரு உயிரின் வடிவாக இருப்பவள் அப்பெண். உயிரை சுமக்கும் வேளையில் அவர்களை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

pregnancy pregnant-symptoms women

#1. கர்ப்பிணி பெண்களுக்கு அதிக தாகம் எடுக்கும். அந்த நேரத்தில் தண்ணீரை அதிகம் குடித்தால், பசி எடுக்காது. எனவே, மிதமான சூட்டில் இருக்கும் வெதுவெதுப்பான நீரை பருகினால் நல்லது.

#2. எந்த சூழ்நிலை வந்தாலும் இறுக்கமான ஆடை மட்டும் அணியவே கூடாது. அது அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துவதோடு, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லதல்ல.

#3. கர்ப்பிணி பெண்களுக்கு 8 மணி நேர தூக்கம் சிறந்த டானிக் மாதிரி. பகல் உணவுக்கு முன் கொஞ்ச நேரம் தூங்கலாம். ஆனால் உணவு உண்ட பின்பு தூங்க கூடாது.

#4. முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனையே நினைத்துக்கொண்டிருக்க தேவையில்லை. காலையில் எழுந்தவுடன், கொஞ்சம் டீ அல்லது வெதுவெதுப்பான நீர் அருந்தினால் குமட்டல் உணர்வு வராது.

#5. எக்காரணத்தை கொண்டும் சிறுநீரை அடக்க கூடாது. அதனால் நீர் கடுப்பு ஏற்படும். அதற்கு பார்லி தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால், நீர் கடுப்பு சரியாகி, சிறுநீர் நன்றாக பிரியும்.

#6. அதிகம் இனிப்பான பண்டங்களை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். இனிப்பு, கார பதார்த்தங்களை சரிவிகித அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#7. பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம். கருவில் இருக்கும் குழந்தைக்கும் இரும்பு சத்து தேவைப்படுகிறது. அதனால் நல்ல இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

#Pregnancy symptoms: தாயின் உடல் சுத்தமும், ஆரோக்கியமும், நல்ல சிந்தனையும், நல்ல ஒழுக்கமும், சிறந்த குழந்தை உருவாக காரணமாகும்.