Relations

10 பொருத்தம் பார்த்தால் தான் திருமணம் நடக்குமா? வர்ணாஸ்ரமம் வகுத்த வைத்த முறை இந்தக் காலத்துக்கு ஏற்றது தானா? இப்படி இருந்தா கல்யாணம் ஆனமாதிரி தான்!

Sep 13 2021 10:16:00 PM

நான் கேள்விப்பட்ட வரையில் ஜாதக அடிப்படையில் திருமணத்திற்கு ஏராளமான விஷயத்தை ஆய்வு செய்கின்றனர். லக்கின பொருத்தம், 10 பொருத்தம், நவாம்ச விஷயங்கள், இருவருக்கும் நடைபெறும் திசை உட்பட இன்னும் வேறு சில விஷயங்களை உன்னிப்பாக பார்க்கின்றனர். அந்தக்காலம் மாதிரி ராசியை மட்டுமே வைத்து எதனையும் முடிவு செய்வதில்லை. எல்லோரும் பொதுவாக 10 பொருத்தம் பார்ப்பதை தவறாமல் கடைபிடிக்கின்றனர்.

marriage astrology hope

அதில் குறைந்தது அவசியமான 4 பொருத்தங்கள் இருக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும், அந்த வரனின் ஜாதகம் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்கு மேல் ஆறு பொருத்தம் இருந்தால் ஓரளவுக்கு கணக்கில் எடுத்துக்கொள்கின்றனர். பெரும்பாலானோருக்கு 8 முதல் 9 பொருத்தம் வரும். ஒரு சிலருக்கு மட்டும் அபூர்வமாக 10 பொருத்தம் வரும். இதற்கு அடுத்து வரன்கள் முடிவு செய்ய ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும். இதனை அனுபவம் மிகுந்த ஜோதிடர் மூலமாக செய்வது நல்லது.

marriage astrology hope

ஜாதகரின் உடல் அமைப்பு, ஆரோக்கியம், படிப்பு, தொழில், பொருளாதார வளர்ச்சி, திருமண வாழ்க்கை முதலியவை குறித்து இலக்கினத்துடன் கூடிய ஜாதக கட்டம் தெரியப்படுத்தும். பெரும்பாலும் யாரும் இந்த அளவுக்கு உன்னிப்பாக ஜாதகம் பார்ப்பதில்லை. 10 பொருத்தத்தில் முக்கியமானவை சில கூடி வந்தாலே போதும், அடுத்தகட்ட திருமண வேலைகளை ஆரம்பித்துவிடுகின்றனர். ஜோதிடம் தோன்றிய காலத்தில் வர்ணாஸ்ரம முறையை பின்பற்றியது தெளிவாக தெரிய வருகிறது.

marriage astrology hope

பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று நான்கு வர்க்க பிரிவு இருந்தது. அதில் பிராமணர்களுக்கு தின பொருத்தம் முக்கியமாக பார்க்கப்பட்டது. அது நட்சத்திர பொருத்தம் அடிப்படையிலானது. ஷத்ரியர்களுக்கு, அசுர, ராட்சச, மனுஷ மற்றும் தேவ கணமா என்பதை உறுதி செய்யும் கண பொருத்தமும், பிற வர்க்கத்தினருக்கு யோனி பொருத்தமும் பார்த்து திருமணம் செய்யவேண்டும் என்பது ஆதிகால ஜோதிட சுவடி நூல்களில் உள்ளது. அப்போதிருந்த முறையை இன்னும் மாற்றாமல் அதே மாதிரி கடைபிடித்து வருகின்றனர். காலத்து ஏற்ற மாதிரி கொஞ்சம் மாற்றிக்கொண்டால், திருமணமாகாத பல பேருடைய வாழ்வில் ஒளியேற்றப்படும்.