Relations

அடக்கடவுளே! ஒரு நைட் முழுக்க கையில் இருப்பதால் இவ்வளோ நடக்குதா உடம்புக்குள்ள? மருதாணியின் இரகசியம் தெரியாமல் தங்கச்சி மேல கோவப்பட்டுட்டனே!

Jul 24 2021 07:41:00 AM

என் தங்கச்சிக்கு கைகளில் மருதாணி வைப்பதென்றால் ரொம்பப்பிரியம். வரும் வழியில் எங்காவது மருதாணிச் செடியை பார்த்துவிட்டால், உடனே இலைகளை பறித்து வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவாள். அடிக்கடி அரைத்து விரல்களுக்கும், உள்ளங்கையிலும், கால்களிலும் பூசிக்கொள்வாள். ஒருநாள் எனக்கு கொஞ்சம் வேலை பளு அதிகம் இருந்தது. சரியா அந்த நேரம் பார்த்து அரைத்த மருதாணியை அள்ளிப்போட ஒரு பாத்திரம் எடுத்து தரச் சொன்னாள்.

maruthaani hand decoration

உடனே நான் கோவப்பட்டு, "கடைக்கு போய் இருபது ரூபாய் கொடுத்தா ஒரு கோன் கிடைக்க போகுது. இன்னும் மருதாணி இலைய அரைச்சு பூசிக்கிட்டே இரு" என கொஞ்சம் கடிந்து கொண்டேன். இருந்தாலும், பாசக்காரி, நான் கோவமா பேசினாலும், என்னிடம் அன்பாகவே நடந்து கொள்வாள். அவமேல கோவப்பட்டு ஒரு வாரம்  தான் இருக்கும். எனக்கு கைகளில் தேமல் வர ஆரம்பித்தது. மெடிக்கல் ஷாப்களில் வாங்கும் மருந்துகள் சேராது.

maruthaani hand decoration

நாட்டு வைத்தியம் தெரிந்த மாமாவுக்கு அழைத்து கேட்டபோது, மருதாணி இலைகளை அரைத்து பூசச் சொன்னார்.  மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌மாம். சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் வரும். அதற்கும் மருதாணி நல்ல பலனை கொடுக்கும். மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு பூசினால் உடல் வெப்பம் தணியுமாம். நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகசுத்தி வராமல் தடுக்கும்.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கும். இன்னைக்கு கைகளில் பூசுவது மருதாணியே இல்லை. கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி கோ‌ன்க‌ளி‌ல் மருதாணி இலைகள் அரைத்து கலக்க வாய்ப்பே இல்லை. மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறு. சிலரு‌க்கு மருதா‌ணி வைத்தால் ச‌ளி ‌பிடி‌க்கும் என்றால், இலைகளை அரை‌‌க்கு‌ம் போது, நொ‌ச்‌சி இலைகளை சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது. இதெல்லாம் தெரியாமல் முட்டாள் மாதிரி தங்கச்சிய திட்டி இருக்கேன்.