Relations

உங்களுக்கு பிடித்த பெண்ணுக்கு சர்பிரைஸ் கொடுக்க போறீங்காளா? எச்சரிக்கை! உளவியல் ரீதியாக அவங்க என்ன நினைப்பாங்க? வாழ்க்கை முழுவதும் போராடணும்!

Jul 15 2021 06:48:00 AM

பெண்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தா ரொம்ப பிடிக்குமாம். அவங்களுக்கு இது நல்லா இருந்தாலும், ஆண்களுக்கு சில நேரங்களில் சிக்கலை ஏற்படுத்திவிடுமாம். இப்படித்தான் எங்க அக்கா பையனுக்கு திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருந்தோம். நல்ல சம்பந்தம் வீடு தேடி வந்தது. இரு குடும்பத்தாருக்கும் ரொம்ப பிடிச்சுப்போச்சு. பெண் வீட்டார் அம்மா வகையில் தூரத்து சொந்தம். எல்லாம் ஏற்கனவே தெரிந்தவர்களாக இருந்ததால், நிச்சயம் சீக்கிரம் வைத்துவிட்டோம்.

women surpise men

பெரியவங்களுக்கு பிடித்துப்போன மாதிரியே பையனுக்கும், பெண்ணுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. நிச்சயத்துக்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், அக்கா பையன் பெண்ணுக்கு சர்பிரைஸ் கொடுக்குறேன்னு சொல்லி நிறைய மேக்-அப் அயிட்டங்கள், மோதிரம், அவுட்டிங்னு ரொம்ப ஜாலி பண்ணியிருக்காங்க போலிருக்கு. அவங்க அவுட்டிங் போனது வீட்டுல யாருக்கும் தெரியாது. பிறகு ஒரு வழியா கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. எல்லாம் நல்லா தான் போயிக்கிட்டு இருந்துச்சு.

women surpise men

திடீரென மூன்றே மாதத்தில் பொண்ணு கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருச்சு. ஏன்னு விசாரிச்சுப் பார்த்தா, பையன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி இருந்தான், இப்போ ஒரு மாதிரி இருக்கான்னு சொல்லி இருக்கு. எங்களுக்கு ஒன்னும் புரியல. கொஞ்சம் விளக்கமா கேட்டோம். பிறகு தான் தெரிகிறது இந்த கால பெண்களின் மனநிலை எப்படி இருக்குன்னு. கல்யாணத்துக்கு முன்னாடி புதுசா பேசுற பெண்ணை கவர வேண்டுமென சர்பிரைஸ் மேல சர்பிரைஸ் கொடுத்து இருக்கான் அக்கா பையன். கல்யாணம் ஆன உடனே மனைவி தானே என்ற மிதப்பு வந்துவிட்டது. கொஞ்சம் கண்டுக்கலையாம்.

women surpise men

அங்கிருந்து தான் பஞ்சாயத்து தொடங்கி இருக்குது. உளவியல் ரீதியாகப்பார்த்தல், ஒரு பெண்ணுக்கு நீங்க இன்ப அ திர்ச்சி கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், மீண்டும் மீண்டும் அதே மாதிரி வேண்டுமென மனம் ஏங்கும். முதல் முறை சர்பிரைஸ் கொடுக்கும் போதே, இப்போதைக்கு என்னால் முடிந்தது இதுதான், இதேபோல எல்லா முறையும் எதிர்பார்க்கக்கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கை முழுக்க கணவர் சர்பிரைஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்துவிடும்.