Relations

எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே லவ் பெயிலியர்! சாதாரண ஒரு ஆண், எந்த மனநிலையில் இந்த சூழ்நிலையை அணுகுவான் தெரியுமா? அது தான் தப்பு!

Jul 04 2021 01:02:00 PM

எந்த பெண்ணாக இருந்தாலும், தன்னுடைய கடந்த கால வாழ்வைப் பற்றி வெளிப்படையாக வெளியில் சொல்ல மாட்டாங்க. அப்படி எங்காவது சொல்லி தன்னுடைய வாழ்க்கைத் துணை கடைசிவரை சந்தேகப்புத்தியோடு பார்ப்பாங்களோ, என்னவோன்னு பயந்துக்குவாங்க. ஏன் நமக்கு அந்த வம்புன்னு சொல்லி, கடந்து போன கசப்பான நினைவுகளை, பெரும்பாலும் யாரும் வெளியில் சொல்வதில்லை. அது நல்லது என்றாலும், எல்லா சூழ்நிலையிலும் கை கொடுக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

wife love husband

வாழ்க்கை துணையாக அமைந்தவர், அந்தப் பெண்ணின் நட்பு வட்டாரத்தில் பழக்கமுடையவராக இருந்து, வேறு யாராவது சொல்லி, பழைய சம்பவங்கள் தெரிய வந்தால், இன்னும் அது டேஞ்சர். முடிந்த வரையில், நமக்கு கணவனாக வரப்போகிறவர் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை பேசி புரிந்துகொண்டு மேற்கொண்டு வெளிப்படையாக பேச முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு என்னுடைய அனுபவத்தையே சொல்கிறேன். எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே லவ் பெயிலியர் ஆயிருக்கு.

wife love husband

அதனை மறைப்பதை கூட ஒரு குற்ற உணர்வாக நினைத்துக்கொண்டு, எல்லாமே வெளிப்படையாக சொல்லிவிட்டார். அந்தந்த வயதில் வரும் ஆசையால் செய்யும் தவறுகளை குறை சொல்லி பிரயோஜனமே இல்லை. அவங்க காலேஜ் கிளாஸ் ரூமில் எல்லோருக்குமே ஜோடி இருப்பாங்களாம். இவளுக்கு மட்டும் ஒருவரும் இல்லையென எல்லோரும் கிண்டல் செய்யவே, லவ் பண்றேன்னு சொல்லி, பேஸ்புக்கில் ஒருவனிடம் பேசியிருக்கிறாள். பிறகு அவனுடைய குணம் தெரிந்து நாசுக்காக விலகிவிட்டாள்.

wife love husband

இது சின்ன சம்பவமாக இருந்தாலும், தனக்கு வாழ்க்கை துணையாக வரப்போகிறவரிடம் எதையும் மறைக்கக்கூடாதென உண்மையை வெளியில் சொன்ன நேர்மை பிடித்து இருக்கு. இந்த மாதிரி எதையும் அனுசரணையோடு தம்பதிகள் பேசிக்கொண்டால், மனக்கசப்பு என்பதே வராது. ஆனால் நீ முந்தியா? நான் முந்தியான்னு போட்டி போட்டுக்கொண்டு ஈகோ பார்த்தால், குடும்பத்தில் என்னைக்கும் நிம்மதி இருக்காது. கையில் கிடைத்த பாறையை சிற்பமாக மாற்றப்போகிறோமா? ஜல்லிக்கல்லாக மாற்றப்போகிறோமா? என்பது நம்ம கையில் தான் இருக்கு.