Misc

யாரு ரியல் யாரு ரீல் என்றே புரியவில்லையே! எப்படி இருந்த நடிகை தரமான கதைக்காக இப்படியும் நடிச்சிருக்காங்களே!

Nov 03 2021 01:15:00 PM

தீபாவளி நெருங்கிவிட்டது. கொரோனா ஊரடங்கு பரிதாப நிலையெல்லாம் தாண்டி வந்துட்டோம். தீபாவளியை அமர்க்களமாக கொண்டாட அனைவரும் தயாராகிக்கொண்டிருப்பீங்க. தீபாவளி அன்று தியேட்டரில் சென்று படத்தை பார்க்க நிறைய பேர் பிளான் போட்டு வச்சிருப்பீங்க. தாராளமா சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தை தியேட்டரில் சென்று கண்டுகளியுங்கள். அதே சமயம் நீங்க பார்க்க வேண்டிய இன்னோரு முக்கியமான படம் தான் ஜெய் பீம். இந்தப்படத்துக்கு இவன் எதுக்கு சிபாரிசு பண்ணுகிறான் என்று எண்ண வேண்டாம். நல்ல படம் என்பதால் நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் அவ்வளவு தான்.

lijomol-jose jai-bheem-heroine

எப்போதுமே உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினால் அது கண்டிப்பாக பாராட்டுகளை பெறுவதோடு மிகப்பெரிய வெற்றியும் அடையும். இதற்கு கடந்த காலத்தில் வெளிவந்த பல படங்களை உதாரணமாக சொல்லலாம். எத்தனையோ படங்களில் காவல் துறையினரை பெருமைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வச்சிருக்காங்க. ஆனால் எல்லா காவல்துறையினரும் நல்லவர்கள் கிடையாது. அவர்களில் ஒரு சிலர் தீ யவர்களாகவும் இருக்கின்றனர் என வெளிப்படையாக சொல்ல தைரியம் வேண்டும். அதைத்தான் இந்தப்படத்தின் இயக்குனர் செய்திருக்கிறார்.

lijomol-jose jai-bheem-heroine

வெற்றிமாறனின் விசாரணை படத்தில் போலீசாரின் வேறு முகத்தை நாம் பார்த்திருப்போம். அதேபோலத்தான் இந்தப்படத்திலும் காவல்துறையினரின் வெளியில் தெரியாத மறுபக்கத்தை இயக்குனர் காட்டியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்துக்கு தத்ரூபமாக நடிக்க திறமையான நடிகர்கள் தேவை. நடிகர, நடிகைகள் தேர்விலும் இயக்குனர் சூப்பராக கவனம் செலுத்தியுள்ளார் என்பதை படம் பார்த்தால் நீங்க உணர முடியும்.

lijomol-jose jai-bheem-heroine

சூர்யா எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் காவல்துறையினரால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடும் ஒரு ஏழைப்பெண்ணாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டார். இவரை உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்தே அதே கதாநாயகி தான் இவர். ஆனால் இந்தப்படத்தில் கதாபாத்திரமாகவே மாறிவிட்டதால் அவரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமமாக உள்ளது.

lijomol-jose jai-bheem-heroine

தற்போது படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் உண்மையான முகங்களையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அதிகமாக ட்ரெண்ட் செய்கின்றனர். இதில் ரியல் நபர் மற்றும் ரீல் கதாபாத்திரங்கள் என பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் ஒத்துப்போகின்றனர். அதுமட்டுமல்லாமல் படத்தை பாராட்டி பலரும் ட்விட்டரில் தங்களுடைய கருத்துக்களையும் கூறி வருகின்றனர். எனவே நீங்களும் தவறாமல் இந்தப்படத்தை பாருங்கள் நண்பர்களே.

lijomol-jose jai-bheem-heroine

lijomol-jose jai-bheem-heroine