Relations

மனைவியை சகோதரி என கூறி என்ன வேலை செய்துள்ளான்? இதற்கு மேல் ஒரு கணவர் இறங்க முடியாது!

Jul 08 2021 11:19:00 PM

திருமணம் என்பது பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் உண்டாகும் ஒரு பந்தம். இதில் சில சமயங்களில் ஏ*மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு பலர் நகர்ந்துகொண்டு தான் செல்கிறார்கள். ஆனால் ராஜஸ்தானில் நடந்த இந்த சம்பவம் நன்கு விசாரிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்ககூடாது என்பதை உணர்த்துகிறது. தாலி கட்டிய மனைவியை சகோதரி என்று பொய் சொல்லி இன்னொருவருக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு தற்போது இந்தியாவில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டா என்ற பகுதியை சேர்ந்த தம்பதி தான் சோனு மற்றும் கோமல். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த பல இடத்தில் வேலை தேடி உள்ளனர். எந்த இடத்திலும் நல்ல வேலை கிடைக்காததால் கடும் வி*ரக்தியில் இருந்துள்ளனர்.

rajasthan-marriage

வேலை கிடைக்காத வ*ருத்தமும் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களை இந்த மோ*ச வேலை செய்ய வைத்துள்ளது. இவர்கள் இருவரும் அதே பகுதியில் இருக்கும் சுமன் என்ற தரகரை சந்தித்துள்ளனர். அவருடன் கோமல் தனது சகோதரி என்றும் அவருக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் கணவரான சோனு. 

rajasthan-marriage

திருமணம் ஆன உடன் மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் நகைகளையும் பணத்தையும் எடுத்து விட்டு செல்ல வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர் இந்த தம்பதிகள். அந்த நேரத்தில் தான் தரகர் ரவி வாயிலாக கோமலை பெண் கேட்டுள்ளார்கள். கோமலுடன் இருந்த சோனுவை அவரது சகோதரர் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களின் திட்டப்படி திருமணம் முடிந்த அடுத்த நாள் கோமலையும் வீட்டில் இருந்த நகைகளையும் பணத்தையும் காணவில்லை. 

rajasthan-marriage

சந்தேகம் அடைந்த மாப்பிளை வீட்டார் போலீஸிடம் புகார் கொடுத்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்த போலீசார் அவர்களை தீவிரமாக விசாரித்துள்ளனர். இதில் இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல் அந்த தரகரும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் போலீஸ் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இறுதியாக மனைவியை இன்னொருவருக்கு மனைவியாக்கும் நிலைக்கு தள்ளிவிடுகிறதே?