HotPicks

என்ன வாத்தியாரே இப்படி அசிங்கப்படுதீட்டாங்க? பணம் இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள சில பெண்கள் செய்யும் வேடிக்கையான விஷயம்!

Aug 14 2021 03:16:00 PM

பணம் இருக்கிறது என காட்டிக்கொள்ள சிலர் செய்யும் வேடிக்கையான விஷயங்களை பார்க்கும் போது, சிரிப்பு பொத்துகிட்டு வந்துவிடுகிறது. அதிலும் ஒரு சில ஆட்கள், மெல்லிசான வெள்ளை சட்டையைப்போட்டுக்கிட்டு, 500,2000 ரூபாய் நோட்டு எல்லாம் தெரியிற மாதிரி வச்சுப்பாங்க. அட ஆளானப்பட்ட டாடாவே வெளிநாடு போக எகனாமிக் ரேட் விமான சீட்டில் தான் பயணிப்பாராம். இத்தனைக்கும் அவரிடம் தனி விமானம் வாங்கும் அளவுக்கு காசு இருக்கு. இங்கே டுபாக்கூரு பணக்காரர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியல.

rich rich-women rich-girl

இந்த விசயத்தில் ஆண்கள் எப்படின்னு நிறையப்பேருக்குத் தெரியும். பெண்களைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டு இருக்கமாட்டீங்க. பெண்கள் பெரும்பாலும் புடவை, தங்க நகைகள், காலணி மூலமே தங்கள் பகட்டை வெளிக்காட்டிக்கொள்வார்கள். 1000 ரூபாய்க்கு சரிகை வைத்த புடவையை 3000 ரூபாய் என்று பெருமையாக சொல்வாங்க. இடையில் யாராவது புகுந்து உண்மையான ரேட் கூறிவிட்டால் மூஞ்சி சிறுத்துவிடும். மூன்று அல்லது நான்கு கிராமில் 5 கிராம் செம்பு கலந்த ஆரம் பெரியதாக மாட்டி கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் மூன்று பவுனு என பந்தா காட்டுவாங்க. 

rich rich-women rich-girl

வண்டி சரியா ஓட்ட தெரியாம ஸ்கூட்டி வாங்கி கொண்டு, இளம் பெண் போல முகத்தை முடி கொண்டும், கணவரின் பழைய சட்டையை சுடிதார் மேல் போட்டு கொண்டு சுற்றுவார்கள். கேட்டா டஸ்ட் அல்ர்ஜி, ஸ்கின் கலர் டோன் மாறி விடும் என்ற பதில் வரும். எப்போதும் பளபளவென்றே இருக்க ரொம்ப மெனக்கெடுவாங்க. கார்ப்பரேசன் கொசு மருந்து அடித்துவிட்ட மாதிரி, ஏரியாவே மணக்கும் அளவுக்கு வாசனை திரவியங்களை போட்டுக்கொள்ளுவார்கள்.

rich rich-women rich-girl

யாராவது கேட்டால் எங்க சொந்தக்காரங்க சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, லண்டன்ல இருந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு பொய் முட்டையை அவிழ்த்து விடுவார்கள். ஹோட்டலுக்கு போனால் மினெரல் வாட்டர் தான் குடித்து பழக்கம் போல காட்டி கொள்ளுவார்கள். சில பெண்கள் நாப்கின் பயன்படுத்துவதில் கூட பந்தா கட்டுவாங்களாம். காஸ்ட்லியான நாப்கின் கவர் வீட்டுக்கு வெளியே குப்பை போடும் போது, வேணும்னே பறக்கவிடுவாங்க. அவங்க காஸ்டலியான நாப்கின் யூஸ் பண்ணுறாங்களாம். அது மத்தவங்களுக்கு தெரியணுமாம். எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க. இன்னும் நிறைய இருக்கு. உங்க அனுபவம் ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க.