HotPicks

முட்டை ஓடு உடையாமல் வேக வைப்பது எப்படி? குடும்ப பெண்களுக்கு மட்டுமே தெரிந்த சூட்சமம்! அவ்வளோ சீக்கிரத்துல யாரும் சொல்ல மாட்டாங்க!

Sep 09 2021 06:23:00 PM

தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கும் பேச்சுலர் வாழ்கையில் முட்டையின் பங்கு இல்லாமல் இருக்காது. பல நேரங்களில் பசிக்கும் போதெல்லாம், எளிமையான முறையில் பசியாற்றியவை முட்டைகள். கடைக்கு சாப்பிடப்போனால், 50 ரூபாய்க்கு மேல் செலவாகுமேன்னு, நிறைய தடவை ரூமிலேயே ஆம்லேட் மட்டும் போட்டு சாப்பிட்டு படுத்திருக்கிறேன். இப்படி வாழ்வியலோடு கலந்து போன முட்டையை, சரியாக வேக வைக்கும் கலை மட்டும் இன்னும் தெரிய மாட்டேங்குது.

egg egg-shell egg-boil

அதென்னங்க தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டால், வேக வைத்த முட்டை ரெடி. இதில் என்ன கம்பு சுத்துற வேலை இருக்குன்னு கேட்கலாம். இதுவரையில் வேக வைக்கும் போதெல்லாம், ஒன்று முட்டை ஓடு உடைந்துவிடும். இல்லையென்றால் மஞ்சள் கரு சரியாக வேகாமல் இருக்கும். இரண்டும் சரியாக இருந்தால், முட்டை ஓட்டை லாவகமாக பிரிக்க முடியாது. ஆகமொத்தத்தில் ஏதாவது ஒரு வகையில் சொதப்பிவிடும். ஆனால் அக்கா, அம்மா, தங்கச்சி எல்லாம் பர்பெக்டா வேக வைக்கிறாங்க.

egg egg-shell egg-boil

என்ன தான் செய்யிறாங்கன்னு கொஞ்சம் கவனித்துப்பார்த்தேன். முட்டையை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். அப்போது தான் முட்டை ஓடு உடையாதாம். எப்போதும் குறைந்த சூட்டில் வேக வைத்துப்பாருங்கள். அப்போது கொஞ்சம் நேரம் அதிகம் எடுக்கும். ஆனால் முட்டை உடையாமல் வெந்து கிடைக்கும். அதே மாதிரி பிரிட்ஜில் இருந்து எடுத்த உடனேயே அடுப்பில் வைக்கக் கூடாது. அந்த முட்டை வேகும் போது சீக்கிரம் விரிசல் விடும். 

egg egg-shell egg-boil

முட்டை வேக வைக்கும் போது தண்ணீர் அதிகம் இருக்க கூடாது. முட்டைகள் மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் இருக்க வேண்டும். முட்டை ஓடு விரிசல் விட்டு இருந்தால் அதன் மேல் சிறிது கோதுமை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து முட்டை ஓட்டின் விரிசலில் தடவி வேக வைத்து எடுத்தால் வெள்ளை கரு வெளியே கசிந்து, அசிங்கமாக தெரிவது நடக்காது. சாதாரணமா சுடு தண்ணீரில் வேக வைக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனால் இதற்குப்பின்னால் இவ்வளோ விஷயங்கள் இருக்கு பாருங்களேன்.