Relations

எந்த மாதிரியான ஆண்களை பெண்கள் கட்டாயம் விரும்புவர்கள்? அவங்களுக்கு மட்டும் எங்கயோ மச்சம் இருக்குப்பா! கொடுத்து வச்ச மகராசன்கள்!

Sep 06 2021 07:43:00 PM

பெண்களை பெண்களாக மதிக்கும் எவரையும் பெண்களுக்கு பிடிக்கும். காலேஜ் படிக்கும் போது வேண்டுமானால் கெத்து, மாஸ், மேன்லி லுக்கிற்கு மயங்கி பெண்கள் காதலில் விழுவார்கள். குடும்பம் என்று வருகையில் அவர்களின் எதிர்பார்ப்பே வேறு. பொதுவாக எதிர்பார்ப்புகள், நிபந்தனைகள் இன்றி நாகரீகமாக, அன்புடன் பழகும் ஆண்களை அனைத்துப் பெண்களும் பிடிக்கும். ஒரு சிலர் பழகும் போதே ஒன்றை எதிர்பார்த்து நட்பை தொடங்குவார்கள். அதெல்லாம் எளிதில் பெண்களுக்கு தெரிந்துவிடும். வெக்கம் இருக்கலாம். ஆனால் ஓவர் ஜொள்ளு பார்ட்டியாக இருக்கக்கூடாது. 

women men character

ஒரு சிலர் செய்யத் தயங்கும் செயல்களை இதுல வெக்கப்பட ஒன்றுமில்லையே, ஊர், உலகம் பேசுவதை பற்றி கவலையில்லை. என்னோட அம்மாவுக்காக, என்னோட மனைவிக்காக, என்னோட தங்கைக்காக நான் இதனை செய்கிறேன். அவர்களுக்கு பணிவிடை செய்வதில் தவறில்லைன்னு நினைக்குறானோ, அப்படிப்பட்ட மனப்பக்குவம் உள்ள ஆண்களை பிடிக்காத பெண்களே இருக்க மாட்டாங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா, பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது எங்க அண்ணிக்கு சேலை கீழிறங்கிவிட்டது.

women men character

எங்க அண்ணன் பொதுஇடம் என்று யோசிக்காமல், கீழே குனிந்து மடிப்பு எடுத்துவிட, அண்ணி சேலையை சரி செய்துகொண்டார். நிறைய ஆண்கள் இப்படி செய்வதை கௌரவ குறைச்சலா நினைக்கிறாங்க. என் மனைவிக்கு நான் செய்யிறேன். எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்பது, என் அண்ணனின் குணம். எங்க சொந்த பந்தத்தில் அவனை எல்லோருக்குமே பிடிக்கும். ஆண்களின் இந்த மாதிரியான குணம் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும், கொஞ்சம் பதற்றமும் இருக்கும்.

women men character

காரணம் என்னவென்றால் தன் கணவரை மற்றவர்கள் தாழ்வாக மதிப்பிட்டுவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கும். அதில் கணவனை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். இது என் மனைவியிடம் நான் கண்ட உண்மை. ஒருமுறை உடல்நலமின்றி இருந்த வேளையில் பாத்ரூம் கூட்டிச்செல்லுங்கள் என்று அவள் கூறும்போது, நான் கை தாங்கலாக தோளில் சாய்த்துக்கொண்டு சென்றேன். அப்போது வீட்டில் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம் அவளுக்கு. இந்த மாதிரி தேவை இருக்கும் போது விழுந்து விழுந்து செய்யணும். ரொம்பவும் விழுந்து விழுந்து கவனிச்சா ஒரு கட்டத்தில் வேலைக்காரனாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிடுகின்றனர் என்பதையும் அறிந்துகொண்டேன்.