HotPicks

நிஜமாலுமே இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்குமா? 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படியொரு துரோகம் செய்ய எப்படி மனசு வந்துச்சு? அட போங்கப்பா!

Sep 13 2021 02:24:00 PM

இரட்டைக்கரு முட்டை, இரட்டை வாழைப்பழம் இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பெரிய ஹைப் இருந்துச்சு. தெரியாமல் ரெட்டை வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டால், "போச்சுடா உனக்கு இரட்டைக் குழந்தை தான் பிறக்கும். அதுவும் உடல் ஒட்டிப்பிறக்குமென" பயமுறுத்துவாங்க. அதையும் உண்மையென நம்பிய அப்பாவி ஜீவன்கள் நாங்க. அதேபோல இரட்டை கரு முட்டையும். இப்படி சொல்லி சொல்லியே 90ஸ் கிட்ஸ் தலைமுறையை இன்னும் கிட்ஸ்களாகவே இருக்கும் நிலைக்கு தள்ளியுள்ளனர்.

banana double-banana twine-baby

20கே கிட்ஸ் எல்லாம் பாருங்க. ஸ்கூல் படிக்கும் போதே பயங்கர மெச்சுர்டா பேசுறாங்க. நடத்தையிலும் முதிர்ச்சி தெரிகிறது. இந்த 90ஸ் கிட்ஸ்களின் குணம், அப்போதிலிருந்து, இப்போது வரைக்கும் ஒரே மாதிரியா இருப்பது ஆச்சர்யம் தானே? அந்த ரெட்டை வாழைப்பழ காமெடிக்கு பின்னால் உள்ள இரகசியம் எல்லாம் இப்போ தான் தெரிய வருகிறது. அதெல்லாம் உண்மையா இருந்தா, ஊரில் இருக்க செயற்கை கருத்தரிப்பு நிலையங்களையெல்லாம் மூடிட்டு, பேசாம எல்லோரும் ரெட்டை வாழைப்பழம் விக்கிற வழிய பார்க்கலாம். 

banana double-banana twine-baby

வாழைப் பழத்தில் என்ன சத்து உள்ளதோ அதே சத்துதன் இரட்டை வாழைப்பழத்தில் உள்ளது. ஆண் மற்றும் பெண் உயிர் அணுக்கள் இணையும் போது ஏற்படும் சில சூழ்நிலை காரணங்களால் உருவாகும் கரு இரண்டாகப் பிரிகிறது அல்லது இரண்டு கரு உருவாகிறது. அதன் பிறகு வழக்கமான முறையிலேயே அந்த கரு வளர்ந்து கனி ஆகிறது. இப்படி உருவான இரட்டை வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் எந்த ஒரு பாலியல் ரீதியான மாற்றமும் ஏற்படுவதில்லை.

banana double-banana twine-baby

ஏனென்றால் அது பிறப்பிலேயே குரோமோசோம்கள் நிலை ஆக்கப்பட்ட ஒரு பொருள். இப்போது புரியும் என நினைக்கிறேன். இதே மாதிரி, சேவல் கோழியின் தலையிலுள்ள சின்ன கொண்டையை கொத்தினால் கோழி முட்டைபோடும் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்று இது வரைக்கும் தெரியாது. இதற்கு உங்களிடம் பதில் இருந்தால், கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. அடுத்த பதிவில் அதைப்பற்றியும் 90ஸ் கிட்ஸ்களுக்கு கொஞ்சம் தெளிவா புரிய வைப்போம்.