Relations

#WTF: வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது, அதில் ஒரு வேளையாவது விபச்சாரம் செய்கிறேன்!!

Mar 12 2020 05:38:00 PM

prostitution illegal

வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது, அதில் ஒரு வேளையாவது நான் விபச்சாரம் செய்கிறேன்.

ஆம், என்னைப் பொருத்த அளவில் மனம் ஒவ்வாது செய்யும் எந்த செயலும் விபச்சாரமே. மனம் ஒப்பிச் செய்யும் எந்த செயலும் தியானமே!

விபச்சாரம் என்பது மனம் ஒட்டாமல், உடல்கள் மட்டும் செய்யும். வாழ்வாதாரத்திற்கான பொருளை ஈட்டுவது மட்டுமல்ல. நம் வாழ்வாதாரத்திற்காக, மனம் ஒப்பாமல் செய்யும் எல்லாமே விபச்சாரம் தான்!

நான் தலை எழுத்தே என்று சமையல் செய்வதும் விபச்சாரம் தான். உடலை மூலதனமாக கொண்டு மற்றவருடன் கலவி கொள்பவளும், மனம் ஒப்பி அதில் ஈடுபடும் போது அது தியானம் தான்.

விபச்சாரம் என்ற வார்த்தைக்கு சரியான பொருள். ஆக்கபூர்வமாக திறமையை பயன்படுத்தாமல் வீண் செய்வது. பெண் என்றால் வீட்டு வேலை செய்ய பிறந்தவர்கள் அல்ல. ஆனாலும் மனமில்லாமல் செய்கின்றனர். அது அவர்களின் திறமையை வீணடிக்கத்தானே செய்கிறது? அவர்களின் திறமை வேறு. அதில் கவனம் செலுத்த வேண்டும். மற்றதில் கவனம் செலுத்தினால் வீண். இதுவே விபச்சாரம். வார்த்தைகளுக்கு பொருளை திரித்து வீணாக குதிப்பதே நம் மக்களுக்கு வேலையாகி போய்விட்டது.

ஒரு வேளை விபத்தாக இந்த கலாச்சாரத்தில் நாம் மாட்டிக்கொண்டதை வைத்து தான் இந்த விபச்சாரம் என்ற சொல்லிற்கு பொருள் மாற்றப்பட்டுவிட்டதோ ?