Relations

பிரபலங்கள் மட்டும் வாழ்க்கையில் நடந்த விவாகரத்து பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லையே ஏன்? அந்த விஷயம் கையிருப்பு இருக்கும்போது, பழைய மேட்டர்லாம் வெளியே வருமா?

Nov 02 2021 10:09:00 PM

பெரிய பெரிய செலிபிரிட்டிகள் அடிக்கடி விவாகரத்து செய்து கொள்கிறார்கள். இரண்டு மூன்று கூட இருக்கும். ஆனால் பிரிந்தவர்களை பற்றி பெரிதாக வருத்தப்படுவது போல தெரியவில்லை. வருத்தப்படவில்லை என நீ போய் பார்த்தியா? என கேட்காதீர்கள். ஏனெனில் போன வருடம் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்றால் அடுத்தவருடமே அடுத்த காதலோடு சோசியல் மீடியாவில் போட்டோ பதிவிடுகிறார்கள். இல்லையெனில் திருமணமே செய்து கொள்கிறார்கள்.

celebrity-lifestyle tamil-celebrity

இப்போது சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு வருவோம். முதலில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் விவாகரத்து என்பதே அரிது. ஏனெனில் என்ன ச ண்டை சச்சரவாக இருந்தாலும் பேசியே முடித்துக்கொள்ள தான் உறவுகள் நினைக்கும். கோர்ட் வாசற்படியை மிதிக்க கூடாது என்பதற்காகவே, வீட்டில் உள்ள பெரியவர் ஒருவரை நாட்டாமையாக உட்காரவைத்து பேசி பைசல் செய்து விடுவார்கள். சமாளிக்க முடியாத பட்சத்தில் தம்பதியினர் விவாகரத்து என்ற நிலைக்கு செல்வார்கள். 

celebrity-lifestyle tamil-celebrity

அப்படி விவாகரத்து செய்து கொண்டாலும் அடுத்த காதலுக்கு இருவரும் செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வீட்டில் எங்கு சென்றாலும் துணையின் நினைவுகள் தான் வாட்டி எடுக்கும். வெளியே சென்றால் கூட துணையுடன் சென்ற நினைவுகள் தான் சுற்றி கொண்டே இருக்கும். நட்புவட்டாரம், உறவு வட்டாரம், போறவர இடமெல்லாம் விவாகரத்து செய்து கொண்டது பற்றி தான் பேச்சுக்கள் அடிபட்டு கொண்டே இருக்கும்.

celebrity-lifestyle tamil-celebrity

அதுவே செலிபிரிட்டிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து பற்றி பேச யாருக்கும் நேரமிருக்காது. மக்களை தவிர. அன்றாட வேலையில் அவர்கள் பிஸியாகவே இருப்பார்கள். ஷூட்டிங், வேலை என பெற்றவர்களை பற்றி கூட யோசிக்க நேரமில்லாமல் ஓடுவார்கள். இதில் எங்கு போய் கடந்த கால வாழ்க்கை பற்றி நினைத்து கொண்டிருப்பார்கள்? காலம் ஓடஓட எல்லா கா யங்களும் விரைவில் ஆறிவிடும். கடந்த வருடங்களின் பழைய நினைவுகளையும் மறந்திருப்பார்கள், அதோடு புதிய உறவுகளும் வாழ்க்கையில் வந்திருக்கும். புதிய உறவுகள் கொடுக்கும் ஊக்கத்தால், அடுத்த காதல் வாழ்க்கைக்குள் காலெடுத்து வைக்க துணிவார்கள். நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் தான் பிரபலங்கள் வாழ்க்கையில் விவாகரத்தின் பாதிப்பு ஒரு சில மாதங்கள் தான் உள்ளது. அதுவே சாதாரண மனிதனின் வாழ்க்கையில் விவாகரத்து என்பது பெரிய அ வமானம், வாழ்க்கையில் பெரிய வி பத்து, ஆனால் பிரபலங்களின் வாழ்க்கையில் விவாகரத்து என்பது ஒரு சறுக்கல் போன்றுதான்.