Misc

இதற்கு தான் இவ்வளவு அவசரமாக ஹவுஸ் கேப்டன் ஆனாரா வருண்? வேல்ஸ் நிறுவனத்தின் பாராட்டுதலுக்கும் வருண் செய்த காரியத்துக்கும் சம்பந்தமே இல்லையே!

Nov 03 2021 07:49:00 AM

பிக் பாஸ் சீசன் 5-ன் ஒரு முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுபவர் தான் வருண். திரையுலக பின்னணியில் இருக்கும் காரணத்தால் வருண் ஓரளவுக்கு அனைவருக்கும் அத்துபடியானவர். அதிலும் ஒரு சில முக்கிய நடிகர்களுடன் துணை நடிகராகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் கூட நடித்துள்ள வருணுக்கு மக்களிடம் செல்வாக்கு கொஞ்சம் அதிகம் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் இந்த வாரத்தின் துவக்கம் வருணுக்கு பல சோதனைகளை கொடுத்துள்ளது.

bigg-boss-5-tamil bigg-boss-5-tamil-day-30 bigg-boss-5-tamil-varun

இந்த வார ஹவுஸ் கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெற்ற நிலையில் சிபி அதில் வெற்றிபெற்றார். ஆனால் கதையில் திருப்பமாக வருண் இடையில் வந்தார். தான் வைத்து இருக்கும் பஞ்ச தந்திர காயினை வைத்து சிபியை ஓரங்கட்டிவிட்டு தான் ஹவுஸ் கேப்டனாகப்போவதாக அறிவித்தார்.

bigg-boss-5-tamil bigg-boss-5-tamil-day-30 bigg-boss-5-tamil-varun

பிக் பாஸ் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் கொடுத்தது வருணுக்கே பெரிய ட்விஸ்ட்டாக இருந்தது. நீங்கள் இவ்வாறு கேப்டன் ஆகும்பட்சத்தில் ஒரு வாரம் முழுவதும் பாத்ரூமை சுத்தப்படுத்தும் வேலையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார். வருண் முகத்தில் பெரிய அதிர்ச்சி. காரணாம், பெரும் கஷ்டப்பட்டு எடுத்த பஞ்ச தந்திர காயினை, பாத்ரூமை சுத்தம் செய்யவா பயன்படுத்தியுள்ளோம் என்பது தான்.

bigg-boss-5-tamil bigg-boss-5-tamil-day-30 bigg-boss-5-tamil-varun

ஏற்கனவே பிக் பாஸிடம் மன்னிப்பு கேட்டு வருண் தோப்புக்கரணம் போட்டுள்ளார். வருண் ஒரு போட்டியாளராக மேலும் தனது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிக் பாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது ஹவுஸ் கேப்டன் பதவிக்கு அவரிடம் இருந்த காயினை பயன்படுத்தியது சிறந்த செயலா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், வருண் இந்த வாரத்தின் ஹவுஸ் கேப்டன் ஆனதை பாராட்டி ட்விட் செய்துள்ளது.