Misc

என்னது இந்த பயபுள்ளைக்கு இவ்வளவு சம்பளமா? ஆரம்பத்துல காமெடி பீஸ் மாதிரி இருந்தவரின் இன்றைய நிலை என்னவென்று தெரியுமா?

Sep 17 2021 11:54:00 AM

சினிமா நடிகர்களைப்போல கோடிகளில் புரளவில்லை என்றாலும் சீரியலில் நடிப்பவர்கள் லட்சங்களில் புரளும் அளவுக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். சீரியலில் சாதாரண வேடத்தில் நடிப்பவராக இருந்தாலும் குறைந்தது ஒரு நாளைக்கு 1000, 2000 என்று சம்பளம் வாங்குவாங்க. மெயின் கதாபாத்திரத்தில் நடிக்கிறவங்க  தினமும் ஐந்து அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை கூட சம்பாதிக்கலாம்.

bharathi-kannama arun-prasath

அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்து சம்பளம் சற்று கூட குறைய இருக்கலாம். சீரியல் சரியாக போகவில்லை என்றால் இப்போதெல்லாம் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பாரதி கண்ணம்மாவில் ஹீரோவாக நடிக்கும் அருண் பிரசாத் வாங்கும் சம்பளத்தை பார்த்து பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

bharathi-kannama arun-prasath

தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் அந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருப்பதால் அதில் நடிப்பவர்களின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்து விட்டது. நாயகன் அருண் பிரசாத் ஒரு நாளைக்கு 20000 ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நாடகம் ஆரம்பித்த புதிதில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

bharathi-kannama arun-prasath

இந்த நாடகத்தை பற்றி கலாய்த்து பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். அந்த விமர்சனங்களே இந்த நாடகம் பிரபலமடைய உதவியாக இருந்தது. ஆரம்பத்தில் பெரிதும் ஈர்க்கவில்லை என்றாலும் போகப்போக திரைக்கதையில் பல ட்விஸ்டுகளை வைத்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பாரதி கண்ணம்மா தொடர்.

bharathi-kannama arun-prasath

அருண் பிரசாத் எடுத்தவுடனே இந்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. கடின உழைப்பு, விடாமுயற்சி இதெல்லாம் தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. மக்கள் சீரியலுக்கு கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அதில் நடிப்பவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான்.