Shoreline

நீ செய்தால் சரி, அதுவே இன்னொருவர் செய்தால் உனக்கு வலிக்குதா? இந்த அனிதா வாயை, இனி மூடுவது நடக்காத காரியம்!

Dec 04 2020 02:10:00 PM

தவளை தன்வாயால் கெடும் என்பது போல் அனிதா, தன் வாயால் தான் கெட்டுபோகிறார். ஆரி, சனத்திற்கு ஆதரவாக பேசுவதும் எதிர்ப்பதும் அவரது விருப்பம். இங்கு அனிதா, ஆரியிடம் 'எதற்கு சனத்திற்கு ஆதரவாக பேசினீர்கள்?' என கேட்பது எல்லாம் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு கடுப்பை கிளப்பி கொண்டிருக்கிறது. நேற்று முதலிடத்திற்கு சனம் வாதாடியது, போட்டியாளர்கள் ஓட்டு போடாமல் சனம் அதே இடத்தில் நின்றது தவறு என்கிறார் அனிதா. ஆனால் நீங்க மட்டும் கேமை விட்டே வெளியே போவீங்க, அப்புறம் ஆரி மற்றும் பாலாவிடம் கோள்மூட்டி கொண்டிருப்பீங்க?

anitha-sampath biggboss-4

அனிதா நேற்று, ரேங்க் வரிசையில் நிற்காமல் 'தனக்கான ரேங்க் இதில் எதுவும் இல்லையென' போனது மட்டும் சரியாம். நீங்க உங்களுக்கு விருப்பமான ரேங்க் இல்லை என சொன்னதும், அந்த கேமில் இருந்தே சென்றுவிட்டீர்கள். ஆனால் சனம் தன்னுடைய ரேங்க் முதலிடம் தான் என பேசுவது தவறு? 

anitha-sampath biggboss-4

'தனக்கு வந்த ஒரு போன்காலையும் சனம் சிறப்பாக செய்தார்' என ஆரி சொல்கிறார்! சரிதானே? அது பொறுக்கவில்லை இந்த அனிதாவிற்கு! கமல் வந்து ஏதாவது ஒருவாரம் தட்டிக்கொடுத்தால், அடுத்த வாரத்தில் இருந்து அனிதாவின் ஆட்டம் தாங்கமுடியாது சாமி! ஆட்டம் போட்டால் கூட பரவாயில்லை, அறிவுரை சொல்கிறேன் என பேசுவார் பாருங்க. அதைத்தான் இப்போது ஆரியுடம் செய்து கொண்டிருக்கிறார்.