Relations

#Marriage age: ஏன் கணவனை விட மனைவி வயது குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

May 09 2020 02:56:00 PM

என் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வீட்டில் பெண் பார்த்தார்கள். ஜாதகம் எல்லாம் செட் ஆகிற மாதிரி இருந்தாலும், பையனுக்கும், பொண்ணுக்கும் ஒரே வயது என்று சொல்லி, அந்த சம்மந்தத்தை நிராகரித்தனர். "இந்த காலத்துல பெண் கிடைக்கவே, தவிடு திங்க வேண்டி இருக்கு, ஏன்டா நல்ல சம்மந்தம் வந்தும் விட்டீங்க?" என்று நண்பரிடம் கேட்டேன். எல்லாத்துக்கும் காரணம் அவங்க அப்பா தானாம். நேராக அவரிடமே சென்று " இப்போ போய் ஒரே வாயசு எல்லாம் பார்ப்பாங்களா ப்பா? மனசு ஒத்துப்போச்சுனா கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே? " என்று சொன்னதற்கு, அவர் கொடுத்த விளக்கம் சற்று வித்தியாசமாக இருந்தது.

marriage age-difference married-life

உடற்கூறின்படி ஒரு ஆண் 25 வயதில் தான் முழு வளர்ச்சி அடைகிறானாம். ஆனால் பெண் 20 வயதிலேயே முழு வளர்ச்சி அடைகிறாளாம். 25 வயது ஆணுக்கு இருக்கும் அதே மனப்பக்குவம், 20 வயது பெண்ணுக்கு இருக்கும். ஒரே வயதில் கல்யாணம் செய்து வைக்கும் போது, ஆணை விட பெண் மனதளவில் முதிர்ச்சி அடைந்தவளாக இருப்பாள். தன்னுடைய பங்கு எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பாள். இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் பல இடங்களில் மனமுறிவு ஏற்பட்டு விடுகிறது. இது தான் அதற்கு பின்னால் உள்ள காரணமாம்.

marriage age-difference married-life

அதேபோல் மெனோபாஸ் எனப்படும் விஷயம் பெண்ணுக்கு 45லிருந்து 50க்குள் வருகிறது. அதேபோல் ஆணுக்கு ஆண்ட்ரோபாஸ் 50க்கு மேல் 55 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். பெண்ணுக்கு 45 வயதில் காமம் மீதான ஆர்வம் குறையத் தொடங்கும். அதுவே ஆணுக்கு 55 வயதுக்கு மேல் தான் குறையத்தொடங்கும். எல்லாம் கணக்கு போட்டு பார்த்து தான், ஆணுக்கும், பெண்ணுக்குமான வயது இடைவெளி பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

marriage age-difference married-life

முன்பெல்லாம் நம்முடைய பெற்றோர்கள் காலத்தில் கணவன், மனைவி இடையே 10 முதல் 15 வயது வரை, ஏன் சில இடங்களில் 20 வயது கூட வித்தியாசத்தில் திருமணம் நடக்கும். ஆனால் இந்த காலத்திற்கு அது வேண்டியதல்ல. குறைந்தது 3 முதல் 4 வருட வித்தியாசம் கை கொடுக்கலாம்.  அதற்காக பெண்கள் வயதில் குறைந்தவளாக தான் இருக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. நீங்கள் திருமணம் செய்யும் துணை உங்களோடு எல்லா விஷயத்திலும் புரிதலோடு, மேலும் மன முதிர்ச்சியோடும் இருத்தலே போதுமானது.