பாறையை குடைந்து, குடைவறை கோவில் அமைக்கும் பாணி இந்தியாவில் உருவான கலை. உலகிலேயே அதிக சிற்பங்கள் கொண்ட நாடாக விளங்கும் நிலையில், நம்ம ஊரை போலவே ஐரோப்பாவிலும் சில இடங்களில், இது போன்ற சிற்பக்கலைகள் தென்படுகின்றன. அப்பகுதி மக்களின் கட்டிடக்கலை நுட்பமே வேறாக இருக்கும். பிறகு எப்படி குடைவறை சிற்பங்கள் அமைக்கும் நுணுக்கம் எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்த்தால், எல்லாமே இங்கிருந்து காப்பியடிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. எப்படியோ, நம் முன்னோர்கள் கையாண்ட நுட்பம், இன்றைக்கு உலகம் முழுக்க பரவி வியாபித்துள்ளது நமக்கும் பெருமை தானே.
Petra, Ma`An, Jordan